குயிக்கா வெயிட் லாஸ் பண்ணனும்னு ஆசையா இருந்தா உங்களுக்கு ஏற்றது கொள்ளு விதைகள் தான்!!!
Author: Hemalatha Ramkumar18 February 2023, 12:49 pm
கொள்ளு என்பது அதிக அளவில் புரதம் நிறைந்த பருப்பு ஆகும். இந்த மிகச்சிறிய இயற்கை விதை ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது, முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கொள்ளு சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
●பாரம்பரிய மருத்துவம்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சிறுநீர்ப் பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், மூல நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கொள்ளு அதிசயங்களைச் செய்கிறது. சளியைப் பிரித்தெடுக்கவும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இது நன்மை பயக்கும்.
●ஒளிரும் தோல்
லுகோடெர்மா என்ற தோல் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் கொள்ளு அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உதவியாக இருக்கும். சரும பிரச்சனைகளை தடுக்கவும், சருமத்தை சுத்தப்படுத்தவும் ஃபேஸ் பேக்காகவும் பயன்படுகிறது.
●நீரிழிவைக் கட்டுப்படுத்துகிறது
பதப்படுத்தப்படாத, கொள்ளு விதைகளை (பச்சையாக, முளைக்காதவை) உணவுக்கு பின் சாப்பிடுவது, கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைத்து, இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
●எடை இழப்பை ஊக்குவிக்கிறது
கொள்ளு விதைகள் கொழுப்பை எரிப்பதாக செயல்படும் இயற்கையான குணங்களைக் கொண்டுள்ளன. இது எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து, எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். கொள்ளானது உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு திசுக்களை நேரடியாக தாக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
●விந்து எண்ணிக்கையை மேம்படுத்துகிறது
கொள்ளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் அமினோ அமிலங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த தாதுக்கள் ஆண் இனப்பெருக்க அமைப்பில் சாதகமாக செயல்படுகின்றன. அந்த உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, அதே நேரத்தில் அமினோ அமிலங்கள் நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.