பழைய சோறு: ருசியிலோ அபாரம், ஆரோக்கியத்திலோ ராஜா, அற்புதமான காலை உணவு!!!
Author: Hemalatha Ramkumar30 March 2023, 5:31 pm
இரவு மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி காலையில் சாப்பிடுவது பொதுவாக கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. இந்த பழைய சோறு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. பழைய சோறு ஒரு இயற்கை குளிர்ச்சி, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சியாக இருக்கும்.
நீங்கள் டீ அல்லது காபிக்கு அடிமையானவராக இருந்தால், காலையில் இந்த பழைய சோற்றை முதலில் சாப்பிடுவது, காலையில் டீ அல்லது காபி சாப்பிட வேண்டும் என்ற ஆசையைப் போக்க உதவும். ஆகவே, அடுத்த முறை வீட்டில் சாதம் மிச்சம் இருக்கும்போது, வீணாக்காதீர்கள்.
பழைய சோற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
பழைய சோறு உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு, அன்றைய தினம் முழுவதும் உடல் சார்ஜ் செய்யப்பட்டது போல இருக்கும். அல்சரால் அவதிப்படுகிறீர்களா? விரைவில் குணமடைய பழைய சோற்றை வாரத்திற்கு மூன்று முறை காலையில் சாப்பிட்டு பாருங்கள்.
பழைய சோற்றில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே, இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.