நோயின்றி ஆரோக்கியமாக வாழ தினம் ஒரு பப்பாளி துண்டு சாப்பிடுங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
28 April 2022, 5:54 pm

இயற்கையாகவே பப்பாளி பழத்தில்‌ விஷக்கிருமிகளை கொல்லும்‌ ‌ஆற்றலும், சக்தியும்‌ உள்ளது. பப்பாளி பழத்தை கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டுக்‌ கொள்ளுங்கள். ஏனெனில், அதில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் பி – 6, ரிபோஃப்ளேவின்‌ போன்றவை அடங்கியுள்ளது. வைட்டமின் ஏ சத்து குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக பப்பாளி பழம் சாப்பிட‌ வேண்டும்.

பப்பாளி பழத்தில்‌ உள்ள நன்மைகளும், சத்துக்களும்:
100 கிராம் பப்பாளி பழத்தில்‌ 47 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 60.9 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 0.30 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 2.6 மைக்ரோ கிராம் வைட்டமின் கே‌ உள்ளது.

100 கிராம் பப்பாளி பழத்தில்‌ 0.25 மில்லி கிராம் இரும்புச் சத்து , 20.00 மில்லி கிராம் கால்சியம் சத்து மற்றும் 182 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இப்படி, பல சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பப்பாளி பழத்தை சாப்பிட்டு பயன் பெறுங்கள்.

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-
மலச்சிக்கல் பிரச்சனை தீரும்:
செரிமானத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் ஜங்க்ஃபுட், ஆயில் உணவுகள், மசாலா உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இந்த செரிமான பிரச்சனையை தீர்க்க பப்பாளி பழம் பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த‌ உதவும்.

கண் பார்வையை தெளிவாக்குகிறது:
பப்பாளி பழத்தில்‌ விட்டமின் ஏ, சிப்டோக்சாண்டின், லுடீன், ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சவ்வுகளை ஆரோக்கியமாக‌ வைத்திருக்க உதவுகின்றன.

சருமப்பொலிவிற்கு உதவுகிறது:
நம் அனைவருக்கும் இளமையாக‌ இருக்க வேண்டும்‌ என்ற ஆசை இருக்கும். அதற்கு பப்பாளி பழம் தினமும் சாப்பிட வேண்டும். ஏனெனில், பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டாகரேட்டின் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது. எனவே, இளமையாக இருக்கவும், சருமம் பொலிவுடன் இருக்கவும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் இதர நன்மைகள்:
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்கு பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளி காயின்‌ பாலை புண்கள் மேல் பூசினால் புண்கள் ‌விரைவில் ஆறிவிடும்.

முறையான மாதவிடாய்க்கு பப்பாளி பழம் உண்பதே சரியான வழி. வயிற்றுக்கடுப்பு, செரிமான சிக்கல், அமிலத்தொல்லை இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

உடல் இளைக்க நினைப்பவர்கள் பப்பாளி காயை கூட்டாக செய்து சாப்பிடலாம். பப்பாளி பழத்தை சாலட்டாக செய்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பப்பாளி பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும் பழம். பப்பாளி பழத்தின் விலை குறைவுதான் ஆனால், அதில் இருக்கும் சத்துக்களும், பயன்களும் ஏராளம் .

  • Upendra UI Movie First Card தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
  • Views: - 2375

    0

    0