குப்பைக்கு செல்லும் முள்ளங்கி இலையில் பொதிந்து கிடக்கும் ஊட்டச்சத்துக்கள்!!!

Author: Hemalatha Ramkumar
16 September 2024, 2:26 pm

பொதுவாக முள்ளங்கியை சாப்பிட்டுவிட்டு அதன் மேல் பகுதியில் இருக்கும் இலைகளை நாம் கழிவுகள் என எண்ணி தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் உண்மையில் முள்ளங்கியை காட்டிலும் முள்ளங்கி இலையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கி இலைகள் கிட்டத்தட்ட ஊட்டச்சத்தின் தங்க சுரங்கமாகவே கருதப்படுகிறது. இதனை உங்களுடைய சரிவிகித உணவின் ஒரு பங்காக நீங்கள் எடுத்துவர பல்வேறு நோய்களிலிருந்து தப்பிக்கலாம். இப்படிப்பட்ட நன்மைகள் அடங்கிய முள்ளங்கி இலைகளை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிவோம். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

முள்ளங்கி இலைகளில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் இருப்பதால் இது சிறந்த நோய் எதிர்ப்பு ஊக்கியாக அமைகிறது. அதே நேரத்தில் இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து பொதுவான உடல் நலக் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. 

உடல் எடை குறைப்பு தனித்துவமான சுவையும் ஃப்ளேவரையும் கொண்ட  முள்ளங்கி இலைகள் குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமாக உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கிறது. 

இதய ஆரோக்கியம் 

முள்ளங்கி இலையில் ஆந்தோசயானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் இது இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உதவுகிறது. வைட்டமின் சி ஊட்டச்சத்துடன் சேர்ந்து இந்த காம்பவுண்டுகள் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாக அமையும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்ளுக்கு எதிராக சண்டையிடுகிறது. 

சரும பராமரிப்பு 

கொலாஜன் உற்பத்திக்கு அவசியமான வைட்டமின் சி முள்ளங்கி இலைகளில் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பராமரித்து அதனை பளபளப்பாக இளமையான தோற்றத்தோடு வைக்கிறது. வழக்கமான முறையில் நீங்கள் முள்ளங்கி இலைகளை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு உங்களுடைய ஒட்டுமொத்த சரும ஆரோக்கியமும் மேம்படும். 

ரத்தநாளங்களை பாதுகாக்கிறது 

வைட்டமின் சி அதிக அளவு நிறைந்த முள்ளங்கி இலைகள் ரத்த நாளங்களின் நெகிழ்வு தன்மையை அதிகரிப்பதன் மூலமாக அதன் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவது குறைகிறது.  

டயாபடீஸ் பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது 

ஒரு கப் நறுக்கிய முள்ளங்கி இலைகளில் 1.2 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 0.5 கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. இது டயாபடீஸ் டயட்டுக்கு ஏற்ற ஒன்றாக அமைகிறது. 

எனவே முள்ளங்கி இலையானது ரத்த சர்க்கரை அதிகரிப்பை தவிர்த்து டயாபடீஸ் நோயை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. 

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது 

வைட்டமின் ஏ ஊட்டச்சத்தின் மூலமாக அமையும் முள்ளங்கி இலைகள் கண்பார்வையை மேம்படுத்தி கண்களின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்கிறது. ஒரு கப் நறுக்கிய முள்ளங்கி இலைகளில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நமக்கு தேவையான 52 சதவீத வைட்டமின் ஏ கிடைக்கிறது.

எனவே இனியும் முள்ளங்கி இலைகளை தயவு செய்து தூக்கி எறியாமல் அதனை சமைத்து சாப்பிட்டு அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை பெற்று உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 243

    0

    0