இத படிச்சா இஞ்சியை போல ஒரு அருமருந்து உண்டான்னு நிச்சயமா கேட்பீங்க!!!

Author: Hemalatha Ramkumar
4 November 2024, 1:18 pm

இஞ்சி ஒரு சிறந்த மருந்து என்பதை நாம் அறிவோம். ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சமாளிப்பதற்கு இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இஞ்சியில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இஞ்சியை பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக பயன்படுத்தலாம். உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை ஊக்குவிப்பது வரை இஞ்சி பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இந்த பதிவில் இஞ்சியை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

செரிமானம் 

இஞ்சி செரிமானத்திற்கு சிறந்த முறையில் உதவுகிறது. இஞ்சியானது செரிமான நொதிகளை தூண்டி உணவு விரைவாக உடைக்கப்படுவதை உறுதி செய்கிறது. செரிமான பாதையில் உள்ள தசை செயல்பாட்டை சுமூகமாக்கி வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. அதிலும் குறிப்பாக அதிக அளவு உணவை சாப்பிட்ட பிறகு இஞ்சி சாப்பிடுவது பயனுள்ளதாக அமையும். 

வீக்க எதிர்ப்பு பண்புகள்

இஞ்சியில் காணப்படும் ஜின்ஜரால் வலிமையான வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது வீக்கத்தை குறைத்து ஆர்த்ரைட்டிஸ் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் அறிகுறிகளை தணிக்கிறது. மூட்டு வலி இருப்பவர்கள் அடிக்கடி இஞ்சி சாப்பிட்டு வர கூடிய விரைவில் அதிலிருந்து நிவாரணம் பெறலாம். 

இதையும் படிக்கலாமே: கருவளையத்திற்கு தீர்வு: உருளைக்கிழங்கு சாறுக்கு இவ்வளவு பவர் இருக்கா… யூஸ் பண்ணி பார்த்தா அசந்து போய்டுவீங்க!!!

நோய் எதிர்ப்பு சக்தி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் காரணமாக இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டை போடுகிறது. மழைக்காலத்தில் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனை இருப்பது வழக்கம். இந்த சமயத்தில் இஞ்சி சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக அமையும். 

குமட்டல் 

அறுவை சிகிச்சை அல்லது கர்ப்பத்திற்கு பிறகு குறிப்பாக இஞ்சி ஒரு மரத்து போகும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைக்கு இன்று ஒரு சிறந்த மருந்து. 

இதய ஆரோக்கியம்

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும் பண்புகள் இஞ்சியில் உள்ளது. இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்கு இஞ்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,  ரத்தக்கட்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இஞ்சியில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் காரணமாக ரத்த நாளங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

ரத்த சர்க்கரை 

இஞ்சியானது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். டயாபடீஸ் பிரச்சனையை சமாளிப்பதற்கு இஞ்சி சாப்பிடுவது மிகவும் உதவும். இது விரதத்தின் போது ரத்த சர்க்கரை அளவுகளை குறைத்து இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 207

    0

    0