ஸ்வீட் கார்ன் ரொம்ப பிடிக்குமா… பிரேக் ஃபாஸ்டுக்கு பெஸ்டுன்னு சொல்றாங்க!!!
Author: Hemalatha Ramkumar18 January 2025, 4:12 pm
ஸ்வீட் கார்ன் என்பது நம்முடைய காலை நேர வழக்கத்தில் சேர்ப்பதற்கான ஒரு ஆரோக்கியமான அதே நேரத்தில் எளிமையான ஒரு ஆப்ஷனாக அமைகிறது. காலை நேரம் என்பது பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும் என்பதால் காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சமைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. இது போன்ற நபர்களுக்கு ஸ்வீட் கார்ன் என்பது ஒரு எளிமையான தீர்வாக அமைகிறது.
நம்முடைய நாளை ஆரோக்கியமான முறையில் ஆரம்பிப்பதற்கு ஸ்வீட் கார்ன் ஒரு அற்புதமான அதே நேரத்தில் சுவையான ஒரு வழி. ஸ்வீட் கார்னில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது செரிமானத்தை ஊக்குவித்து, ஆற்றலை அதிகரித்து, நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. ஆகவே இந்த பதிவில் காலை உணவாக ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமான இதயம்
ஸ்வீட் கார்ன் என்பது இயற்கையாகவே குறைவான அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு நார்ச்சத்து கொண்டிருப்பதால் இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கும், ரத்த அழுத்த அளவுகளை குறைப்பதற்கும் உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்
ஸ்வீட் கார்னை காலை உணவாக தினமும் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிலுள்ள அதிக அளவு நார்ச்சத்து.
இதையும் படிக்கலாமே: கற்றாழை ஜூஸ் குடிக்கிறதால ஏதும் பிராப்ளம் வந்துவிடாதே…???
நல்ல பார்வை திறன்
ஸ்வீட் கார்னில் லூட்டின் மற்றும் சியாசாந்தின் போன்ற கரட்டினாய்டுகள் இருப்பதால் வயது தொடர்பான கண் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்தது
ஸ்வீட் கார்னில் அதிக அளவு நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.