BP இருக்கவங்க இந்த பழத்த தினமும் சாப்பிடுறது அவ்வளோ நல்லதாம்!!!

Author: Hemalatha Ramkumar
10 December 2024, 6:29 pm

பொதுவாக குளிர்காலத்தில் நம்முடைய ஆரோக்கியம், தலைமுடி, சருமம் போன்றவற்றிற்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு நாம் சாப்பிடும் உணவில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம். அந்த வகையில் குளிர்கால உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பழம் சீதாப்பழம். இதன் இனிப்பான சுவை மற்றும் கிரீமியான அமைப்பு நம்முடைய சுவை மொட்டுகளை பூர்த்தி செய்து சாப்பிடுவதற்கு அற்புதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழ்ந்து, குளிர்காலம் முழுவதும் நம்மை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆற்றல், நார்ச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அற்புதமான மூலமாக திகழும் இந்த பழத்தை உங்களுடைய குளிர்கால வழக்கத்தில் சேர்ப்பதற்கு சிறந்ததாக மாற்றுகிறது. அந்த வகையில் உங்கள் குளிர்கால உணவில் சீதாப்பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.

செரிமான ஆரோக்கியம்

சீதாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலும் குறிப்பாக உணவு நார்ச்சத்து இருக்கும் காரணத்தால் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த செரிமான செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இந்த அதிக நார்ச்சத்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் C ஏராளம் காணப்படும் சீதாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் வைட்டமின் C வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது.

இதையும் படிச்சு பாருங்க:  ஹேர் ஃபால் பிரச்சினைக்கு ஃபுல்ஸ்டாப் வைக்க உதவும் காலை பானங்கள்!!!

ஆற்றல் 

சீதாப்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இருப்பதால் இது நம்முடைய உடலில் விரைவாக உறிஞ்சப்பட்டு நமக்கு நாள் முழுவதும் சீரான ஆற்றல் கிடைக்கிறது.

தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியம் 

சீதாப்பழம் நம்முடைய சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் உதவுகிறது. சீதாப்பழத்தில் காணப்படும் பல்வேறு ஆன்டி-ஆக்சிடன்ட்களில் குறிப்பாக காணப்படும் வைட்டமின் C கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி அதனை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

ஆரோக்கியமான ரத்த அழுத்தம் 

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை சீதாப்பழம் குறைக்கிறது. வழக்கமான முறையில் அடிக்கடி சீதாப்பழம் சாப்பிட்டு வர இதய ஆரோக்கியம் மேம்படும்.

உடல் எடை கட்டுப்பாடு

குறைந்த கலோரி பழமான சீதாப்பழம் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த சூப்பர் ஃபுட்டாக அமைகிறது. இதில் அதிக நார்ச்சத்து இருக்கும் காரணத்தால் இந்த பழத்தை சாப்பிட்டவுடன் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைப்போம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!