வழக்கமான டீக்கு பதிலா ஒரு மாசத்துக்கு இந்த டீ குடிச்சு பாருங்க… ரிசல்ட் பார்த்து ஷாக்காகி போவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
9 January 2025, 7:13 pm

இந்தியாவில் உள்ள பலருக்கு தங்களுடைய நாளை ஒரு கப் டீ அல்லது காபியுடன் ஆரம்பிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அது உண்மையில் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக பால் டீ என்பது வெறும் வயிற்றில் பருகப்படும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஆகவே உங்களுடைய வழக்கமான டீக்கு பதிலாக ஆரோக்கியமான செம்பருத்தி பூ டீ குடிப்பது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் லேசான புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கிடைக்கும் இந்த செம்பருத்தி பூ டீ நம்முடைய செல்களை பாதுகாப்பதற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ள ஒரு மாயாஜால பானம் என்று சொல்லலாம்.

ரத்த அழுத்தத்தை பராமரிப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல்வேறு நன்மைகளை இந்த செம்பருத்தி பூ டீ தருகிறது. அது மட்டுமல்லாமல் இதில் காபி இல்லாத காரணத்தால் உங்களுடைய டீ பிரேக்குகளில் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு சிறந்த பானமாக அமைகிறது. எனவே இந்த பதிவில் வழக்கமான தேநீருக்கு பதிலாக செம்பருத்தி பூ தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

ஆரோக்கியமான இதயம் 

ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கான இயற்கையான வழிகளில் ஒன்று செம்பருத்தி பூ தேநீர். இந்த ஆரோக்கியமான தேநீர் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலின் சமநிலையை பராமரித்து இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருகிறது.

உடல் எடை குறைய 

செம்பருத்தி பூ டீ மெட்டபாலிசத்தை தூண்டுவதன் மூலமாக இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள டை-யூரிடிக் பண்புகள் நம்முடைய உடலில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது.

செரிமானம் 

வயிற்று உப்புசம், கேஸ்டிரிக் பிரச்சனை மற்றும் அஜீரணம் போன்ற செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை செம்பருத்தி பூ தேநீர் சிறந்த முறையில் கையாளுகிறது. இதில் உள்ள லேசான மலமிளக்கும் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே: ஹெல்தியா வெயிட் கெயின் பண்ண நினைக்குறவங்க தினமும் இதுல ஒரு ஸ்பூன் வாயில போட்டுக்கோங்க!!!

நோய் எதிர்ப்பு சக்தி

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழி செம்பருத்தி பூ தேநீர் குடிப்பது. வைட்டமின்கள் நிறைந்த இந்த தேநீர் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி இயற்கையான முறையில் தொற்றுகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்

வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த செம்பருத்தி பூ தேநீர் வீக்கத்தை குறைத்து, வயதான அறிகுறிகளை தடுப்பதன் மூலமாக ஆரோக்கியமான சருமத்தை தருகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!