பாரபட்சம் பார்க்காமல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் நன்மை அளிக்கும் வெண்டைக்காய் தண்ணீர்!!!

Author: Hemalatha Ramkumar
26 September 2024, 1:14 pm

பல்வேறு சூப்பர் ஃபுட்களை விட வெண்டைக்காயில் நம்ப முடியாத அளவுக்கு அதிக பலன்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. இந்த ஒரே ஒரு காய்கறி நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகளை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, செரிமான ஆரோக்கியத்திற்கு உதவி புரிவது மற்றும் டயாபடீஸ் போன்ற நாள்பட்ட நிலைகளை சமாளிப்பது போன்ற எக்கச்சக்கமான பலன்களை அள்ளித் தருகிறது. இந்திய சமையலறையில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வெண்டைக்காயை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலை பருகுவதால் அதன் பலன்கள் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கிறது. அந்த வகையில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

ஊட்டச்சத்து நிறைந்தது வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது திரவ சமநிலையை சீராக்கி, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. 

மினுமினுக்கும் சருமத்திற்கு 

ஆன்டி-ஆக்சிடன்ட்களின் சிறந்த மூலமாக அமையும் வெண்டைக்காய் ஆரோக்கியமான மற்றும் மினுமினுக்கும் சருமத்தை அளிக்கிறது. வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதன் மூலமாக உங்களுக்கு பொலிவான சருமம் கிடைப்பதோடு வயதான அறிகுறிகளும் குறைகிறது. 

இதய ஆரோக்கியம் வெண்டைக்காயில் முழுக்க முழுக்க நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட், பாலிபீனால்கள் இருப்பதால் இது இதய நோய்களுடன் தொடர்புடைய வீக்கத்தை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, கார்போஹைட்ரேட் நமது உடலில் மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. 

செரிமான ஆரோக்கியம் பெக்டின் நார்ச்சத்து அதிகம் கொண்ட வெண்டைக்காய் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் கொலோனியல் கேன்சர் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைக்கிறது. 

சிறுநீரக செயல்பாடு 

தினமும் மெக்னீசியம் நிறைந்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. 

வீக்கத்தை தணிக்கிறது வெண்டைக்காய் தண்ணீரில் அதிக அளவு வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த அதிசய பானமானது வீக்கத்தை குறைத்து நாள்பட்ட மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. 

ஃப்ரிஸை போக்குகிறது வைட்டமின் ஏ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் தண்ணீர் தலை முடியின் பளபளப்பை மீட்டெடுத்து அதற்கு ஒரு மாய்சரைசராக செயல்படுகிறது. வெண்டைக்காய் தண்ணீரை உங்கள் தலையில் தடவும் போது அது உங்கள் தலைமுடிக்கு உடனடி பளபளப்பு மற்றும் மென்மையை அளிக்கிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு

ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி நீரழிவு நோயை கட்டுக்குள் வைப்பதில் வெண்டைக்காய் தண்ணீர் பெரும் பங்கு கொண்டுள்ளது. 

உடல் எடை இழப்பு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் ஏற்றது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த இந்த வெண்டைக்காய் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது.

கண்பார்வை மேம்படுகிறது 

கண் பார்வையை பராமரிக்கவும், கேட்டராக்ட் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும் பீட்டா கரோட்டின் வெண்டைக்காயில் அதிக அளவில் உள்ளது. 

ஆரோக்கியமான எலும்புகள் 

போதுமான அளவுக்கு கால்சியம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க அவசியம். கால்சியம் சத்தின் சிறந்த மூலமான வெண்டைக்காய் நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது.

இனியும் எதற்காக காத்திருக்க வேண்டும் தினமும் வெண்டைக்காய் தண்ணீரை பருகி அதன் அதிசயமூட்டும் பலன்களை அனுபவியுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!