உடல் எடையைக் குறைக்கும் பப்பாளி பழத்தின் விதைகள்!!!

Author: Hemalatha Ramkumar
8 February 2023, 2:27 pm

தொடர்ந்து நொறுக்குத் தீனிகளை சாப்பிடுபவர்கள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது கடினம். எடையை கட்டுக்குள் வைத்திருக்க வழக்கமான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம். அதே சமயம், சரியான உணவும் தேவை.

உடல் எடையை குறைக்க பழுத்த பப்பாளி விதைகளை சாப்பிடலாம். பழுத்த பப்பாளி விதைகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். பழுத்த பப்பாளி விதைகள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன, வாயுத் தொல்லையை நீக்குகின்றன மற்றும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இந்த காரணங்களால், பழுத்த பப்பாளி விதைகளை சாப்பிடுவதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பழங்கள் அல்லது உணவுகள் எடை குறைக்க உதவுகின்றன. பப்பாளியில் நிறைய தண்ணீர் உள்ளது. தண்ணீர் நமது வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது பப்பாளியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பழுத்த பப்பாளி விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்?
பழுத்த பப்பாளி விதைகளை மென்று சாப்பிடலாம். அல்லது தேவையானால் நல்ல பேஸ்ட் செய்து தண்ணீரில் கலந்தும் உட்கொள்ளலாம்.

  • NAYANTHARA ABOUT DOCU ISSUE உங்கள் கணவர் செய்தது மட்டும் நியாயமா? நயன்தாராவுக்கு எஸ்.எஸ்.குமரன் கேள்வி!
  • Views: - 424

    0

    0