டயாபடீஸ் இருக்கவங்க இனி கவலைபட தேவையில்லை… நிரந்தர தீர்வு கண்டுபுடிச்சாச்சு!!!

Author: Hemalatha Ramkumar
18 January 2025, 10:54 am

நம் உடல் ஆரோக்கியத்திற்கு பூசணி இலைகளை பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன்களை தருகிறது. பூசணி இலைகளில் பல்வேறு மருத்துவ பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. பூசணி இலைகளை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் சில நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்கள் 

பூசணி இலைகளில் வைட்டமின் A, C, கால்சியம் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உட்பட அத்தியாவசிய வைட்டமின்களும், மினரல்களும் காணப்படுகிறது. வைட்டமின் A என்பது ஆரோக்கியமான பார்வை திறனுக்கு அவசியம். அதே நேரத்தில் வைட்டமின் C என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இரும்புச்சத்து சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு அவசியம்.

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் 

பூசணி விதைகளில் ஃபிளவனாய்டுகள், பினாலிக் காம்பவுண்டுகள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பது நம்முடைய உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்கி புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

ரத்த சர்க்கரை 

பூசணி இலைகள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி, ரத்த சர்க்கரை அளவு ஏற்படுவதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே: கிராமத்து ஸ்டைல்ல மணக்க மணக்க நாட்டுக்கோழி குழம்பு!!!

செரிமான ஆரோக்கியம் 

பூசணி இலைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும் இது குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் சமநிலையை பராமரித்து ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?