10 உலர்ந்த திராட்சை இருந்தா போதும்… மலச்சிக்கல் பிரச்சினைக்கு குட்-பை!!!

Author: Hemalatha Ramkumar
30 September 2024, 7:12 pm

உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதே உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் அதனுடைய பலன்கள் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கிறது. காலை எழுந்ததும் இந்த தண்ணீரை நீங்கள் குடித்து வர உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்படும். இப்போது திராட்சை தண்ணீரை பருகுவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

திராட்சை தண்ணீரில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. வைட்டமின்கள் C மற்றும் K முதல் இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் வரை திராட்சை தண்ணீரில் உள்ளதால் இது நம்முடைய உடலுக்கு ஊட்டச்சத்து ஊக்கியாக அமைகிறது. இதனை தினமும் பருகி வந்தீர்களானால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.

திராட்சை தண்ணீர் மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. திராட்சைகளில் காணப்படும் கரையும் நார்சத்து செரிமானத்தை மேம்படுத்தி இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
வழக்கமான முறையில் இதனை நீங்கள் பருகி வந்தால் உங்களுடைய செரிமான அமைப்பு மேம்படும்.

திராட்சை தண்ணீரில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். மேலும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் ஆக்ஸிடேஷனை தவிர்ப்பதன் மூலமாக தமனிகளில் பிளேக் உருவாவதை தவிர்த்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

திராட்சை தண்ணீரில் குறைந்த கிளைசிமிக் எண் இருப்பதால் இது டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் பருகுவதற்கு ஏற்றதாக அமைகிறது. கரையும் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் அடங்கிய திராட்சை தண்ணீர் நமது உடலில் பொறுமையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் திடீர் குளுக்கோஸ் அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்த்து, நிலையான ஆற்றல் அளவுகளை பராமரிக்கிறது.

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படும் இந்த திராட்சைத் தண்ணீர் நமது நோய் எதிர்ப்ப அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தானது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டி ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்குகிறது.

கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே திராட்சை தண்ணீரில் இருப்பதால் இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதை தவிர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் காணப்படும் திராட்சைத் தண்ணீர் ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமத்தின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது. இந்த திராட்சை தண்ணீரை தினமும் பருகி வந்தால் வயதான அறிகுறிகளை போக்கி உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் மீட்டெடுக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!