தீராத முதுகுவலி, மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் ஊற வைத்த வேர்க்கடலை!!!

Author: Hemalatha Ramkumar
8 September 2022, 10:14 am

பலருக்கு வேர்க்கடலை ரொம்ப பிடிக்கும். வேர்க்கடலை சுவையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. மேலும் இதில் பல பண்புகள் நிறைந்துள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. உடல் வளர்ச்சிக்கு போதுமான புரதச்சத்து வேர்க்கடலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஊறவைத்த வேர்க்கடலையின் ஊட்டச்சத்து நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்று நாம் ஊறவைத்த வேர்க்கடலையின் சிறந்த நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஊறவைத்த வேர்க்கடலையின் சிறந்த நன்மைகள்-
*இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் பலருக்கும் மறதி பிரச்சனை உள்ளது. ஞாபக மறதி இருப்பவர்கள், ஊறவைத்த வேர்க்கடலையை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அது உங்கள் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துகிறது.

* வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, செரிமானப் பிரச்சனைகள் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், அத்தகைய சூழ்நிலையில் ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுங்கள். ஏனெனில் இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் விடுவிக்கிறது. தினமும் இரவில் 1 கைப்பிடி வேர்க்கடலையை ஊறவைத்து, காலையில் எழுந்ததும் உட்கொள்ள வேண்டும்.

* உலகில் முதுகுவலி மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இந்த பட்டியலில் உங்கள் பெயரும் இருந்தால், ஊறவைத்த வேர்க்கடலை உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை உட்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஊறவைத்த வேர்க்கடலையை சிறிது வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

* உண்மையில், வேர்க்கடலை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இது உடலுக்கு வெப்பத்தை தருகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் சரியாக இருக்கும். இதனுடன், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

* உங்களுக்கு இருமல் தொந்தரவு இருந்தால், ஊறவைத்த வேர்க்கடலை உங்களுக்கு சிறந்தது. இதனை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, படிப்படியாக இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 704

    0

    0