செருப்பு போடாம நடக்குறதால கூட ஆரோக்கியத்தில் மாற்றம் வருமா…???
Author: Hemalatha Ramkumar16 December 2024, 6:06 pm
புல்வெளியில் வெறும் காலில் நடப்பது பல நன்மைகளை கொடுக்கும் என்று தாத்தா பாட்டிகள் கூற நாம் கேட்டிருப்போம். இது சற்று வித்தியாசமானதாக தோன்றினாலும் இந்த உடற்பயிற்சி நம்முடைய உடல் மற்றும் மனநலனுக்கு பல நன்மைகளை தருகிறது. இந்த பதிவில் செருப்பு அணியாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
வெறும் காலில் நடப்பது தசைகள், தசை நார்கள் ஆகியவற்றை வலுப்படுத்தி இயற்கையான நடமாட்டம் மற்றும் சமநிலையை தூண்டுகிறது. மேலும் இது நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, கால்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
வெறும் காலில் நடப்பது நம்முடைய தோரணையை சரி செய்ய உதவுகிறது. தசைகளை நிலைப்படுத்தி, சமநிலை மற்றும் ஒத்திசைவை அதிகரிக்கிறது.
செருப்பு எதுவும் அணியாமல் வெறும் காலில் நடக்கும் போது உங்களுடைய கால்களுக்கு தரையில் இருந்து நேரடியாக புலன் உள்ளீட்டை கொடுத்து உங்கள் உடலின் நிலையை சரியாக கண்டுபிடிப்பதற்கு உதவுகிறது. இது குறிப்பாக நீங்கள் யோகா, மார்ஷியல் ஆர்ட்ஸ் அல்லது நடனம் போன்றவற்றில் ஈடுபடும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெறும் காலில் நடக்கும் பொழுது நம்முடைய கால்கள் புல், மண், மணல் போன்ற இயற்கை மேற்பரப்புகளின் மீது தொடர்பை பெறுகிறது. இதனால் நமக்கு பூமியுடன் நேரடி தொடர்பு கிடைக்கிறது. இந்த தொடர்பு மன அழுத்தத்தை குறைத்து, ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய ஒட்டுமொத்த மனநலனும் மேம்படுகிறது.
நம்முடைய கால்கள் தரையில் படும்பொழுது அதன் மூலமாக வீக்க எதிர்ப்பு விளைவுகள் வெளிப்படுகிறது. பூமியின் எலக்ட்ரான்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்களாக செயல்பட்டு, உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்கி, நாள்பட்ட வீக்கத்தை குறைப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிச்சு பாருங்க: பனானா மில்க் ஷேக் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா… அப்போ நீங்க தான் இத முதல்ல தெரிஞ்சுக்கணும்!!!
வெறும் காலில் நடப்பதால் கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, உடல் முழுவதற்கும் நல்ல ஆரோக்கியமான ரத்த ஓட்டம் கிடைக்கும்.
தூக்கம் வராமல் பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் தினமும் சில நிமிடங்கள் வெறும் காலில் நடக்கும் பொழுது உடலில் சர்க்காடியன் ரிதம் சீரமைக்கப்பட்டு, தூக்கத்தின் தரம் மேம்படும்.
இதனை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முதலில் புல் அல்லது மணல் போன்றவற்றில் நடந்து பார்க்கலாம். அதன் பிறகு சாலைகளில் நடக்க முயற்சி செய்யலாம். சாலைகளில் நடப்பது உங்களுக்கு சௌகரியமானதாக மாறியவுடன் தொடர்ந்து அதில் நடக்க ஆரம்பியுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.