சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைத்தால் இந்த மாதிரி பிரச்சினை கூட வருமா!!!

Author: Hemalatha Ramkumar
30 November 2024, 4:27 pm

ஃபிட்டாக இருப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பது நம் அனைவருக்கும் புரிந்தாலும் நாம் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய ஒரு முக்கியமான கெட்ட பழக்கம் ஒன்று உள்ளது. அதாவது நீண்ட நேரத்திற்கு சிறுநீரை அடக்கி வைப்பது. ஆரம்பத்தில் இது ஒரு சிறிய தவறு போல தெரிந்தாலும் இந்த பழக்கத்தின் காரணமாக நாளடைவில் மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக சிறுநீரை அடக்க முடியாத நிலையால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது இளைய தலைமுறையினரும் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். 

இன்னும் சொல்லப்போனால், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிறுநீர் கழிக்கும் கட்டுப்பாட்டை இழத்தல் (Bladder incontinence) என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஒரு காலத்தில் இது சீனியர் சிட்டிசன்கள் அதாவது முதியவர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது பல இளைஞர்களும் இந்த பிரச்சினையை அனுபவித்து வருகின்றனர். 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது வலு இல்லாத சிறுநீர்ப்பை இதன் பின்னணியில் உள்ள முக்கியமான ஒரு காரணமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைப்பதால் ஏற்படுகிறது. உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகும் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது மிகவும் மோசமான ஒரு பழக்கம். 

இதையும் படிக்கலாமே: புற்றுநோயை உண்டாக்கும் டாட்டூக்கள்… எச்சரிக்கையா இருந்துக்கோங்கப்பா!!!

இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது படிப்படியாக சிறுநீர்ப்பையின் உணர்திறன் குறைய ஆரம்பிக்கும். சிறுநீர்ப்பையில் உள்ள தசைகள் வலுவிழந்து உங்களுக்கு சிறுநீரக பாதை நோய் தொற்று மற்றும் சிறுநீர் கழிக்கும் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்ட உடனேயே கழிப்பறைக்கு சென்று சிறுநீரை கழித்து விட வேண்டும். இவ்வாறே நம்முடைய உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவ்வாறு செய்யாமல் நீண்ட நேரத்திற்கு நாம் சிறுநீரை அடக்கி வைக்கிறோம். பல வருடங்களுக்கு தினமும் நீங்கள் சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தால் நாளடைவில் சிறுநீர் உங்களுடைய கட்டுப்பாட்டை இழந்து வெளியேற ஆரம்பித்து விடும். ஒருவேளை நீங்கள் பயணம் மேற்கொள்ள இருந்தால் பயணத்திற்கு முன்பு சிறுநீர் கழிப்பது, மேலும் பயணத்தின் இடையே வாய்ப்பு இருந்தால் சிறுநீர் கழிப்பது மற்றும் பயணம் முடிந்தவுடன் உடனடியாக சிறுநீர் கழிப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றுவது அவசியம். 

ஆகவே நீங்கள் அலட்சியமாக செய்யும் இந்த சிறிய தவறுகள் நம்முடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவே இனியும் சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • maharaja movie director got bmw car gift மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா…இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு..!
  • Views: - 114

    0

    0