அடுத்த முறை தயிர் வெங்காய பச்சடி சாப்பிடும் போது இத மறக்காம கவனிங்க!!!
Author: Hemalatha Ramkumar6 September 2024, 9:48 am
தயிர் மற்றும் வெங்காய பச்சடி பிரியாணிக்கு அற்புதமான சைடிஷ் ஆக விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இந்த காம்பினேஷன் உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது நம்முடைய வயிறு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதா? இந்த கேள்விக்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம். தயிர் மற்றும் வெங்காயத்தை இணைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
செரிமானத்தில் தாக்கம்
தயிரில் உள்ள ப்ரோபயாடிக் லாக்டோஸ் மற்றும் பிற காம்பவுண்டுகளை உடைக்கிறது. அதே நேரத்தில் வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சல்பர் காம்பவுண்டுகள் இந்த செயல்முறையை சீர்குலைக்கிறது. எனவே தயிர் மற்றும் வெங்காயத்தை நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பொழுது அதனால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழலாம்.
வாயு மற்றும் அசிடிட்டி வெங்காயத்தில் வயிற்றில் உள்ள வாயு மற்றும் அசிடிட்டியை அதிகரிக்க கூடிய காம்பவுண்டுகள் உள்ளன. இந்த காம்பவுண்டுகள் தயிருடன் இணையும் பொழுது இன்னும் அமிலத்தன்மையோடு மாறுகிறது. இதனால் வயிற்று உப்புசம் மற்றும் அதன் விளைவாக அஜீரணம் அல்லது ஒரு சில நபர்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
சுவை மற்றும் அமைப்பு வெங்காயத்தின் ஃபிளேவர் தயிரின் சுவையை மறைத்து விடுகிறது. இதனால் ஒரு உணவின் ஒட்டுமொத்த சுவை மற்றும் அமைப்பு மாறிவிடுகிறது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல்
தயிர் மற்றும் வெங்காயமாகிய இரண்டும் ஒரு சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தலையிடுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் தயிரில் இருக்கும் கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. எனினும் இது சம்பந்தப்பட்ட கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
ஆயுர்வேதத்தை பொருத்தவரை வெங்காயம் மற்றும் தயிராகிய இரண்டும் நமது உடலில் வாதம் மற்றும் கபம் ஆகியவற்றை அதிகரிக்கும். இதன் விளைவாக ஒரு சில நபர்களில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். எனினும் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது உங்களுக்கு எந்த ஒரு அசௌகரியமும் ஏற்படவில்லை என்றால் தாராளமாக நீங்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிடலாம்.
தயிர் மற்றும் வெங்காயத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. வெங்காயத்தில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதே நேரத்தில் தயிரில் புரோட்டின், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் ப்ரோபயாடிக் காணப்படுகிறது. எனவே இவற்றை ஒன்றாக இணைத்து சாப்பிடும் பொழுது அது ஒரு சிலருக்கு செரிமான அசௌகரியம் மற்றும் அசிடிட்டியை ஏற்படுத்தலாம். எனவே அடுத்த முறை வெங்காயம் மற்றும் தயிர் சாப்பிடும் பொழுது எச்சரிக்கையாக இருக்கவும்.