ஒருவருடைய ஃபிட்னஸ் அளவை பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் நடைபயிற்சியில் ஈடுபடலாம். இந்த குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சி எந்த ஒரு பெரிய அழுத்தமும் இல்லாமல் நம்மை ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. ஆனால் இதனை சரியான முறையில் செய்யாவிட்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக செய்தாலோ நடைபயிற்சியின் காரணமாக கூட ஒரு சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். நடைப்பயிற்சி செய்வது முற்றிலுமாக உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது இதற்கான அர்த்தம் கிடையாது. மாறாத மோசமான நுட்பம், தவறான ஷூக்களை அணிவது அல்லது கரடு முரடான பாதைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவற்றின் காரணமாக உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சினை ஏற்படலாம். எனவே நடைபயிற்சியின் போது ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதிவில் நடை பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படக்கூடிய ஒரு சில உடல் நல பிரச்சனைகளின் பட்டியலை பார்க்கலாம்.
மூட்டு வலி
தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அனுபவிக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனை மூட்டு வலி. அதிலும் குறிப்பாக கீழ் முதுகு, இடுப்பு மற்றும் முட்டிகளில் வலி ஏற்படும். நடைப்பயிற்சி என்பது குறைந்த தாக்கம் கொண்ட உடல் செயல்பாடாக இருந்தாலும் கரடு முரடான சாலை அல்லது நீண்ட தூரங்களுக்கு நடப்பது தொடர்ச்சியாக உங்களுடைய மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே: சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைத்தால் இந்த மாதிரி பிரச்சினை கூட வருமா!!!
கால்களில் கொப்பளம்
அடிக்கடி நடைபயிற்சி செல்பவர்களுக்கு கால்களில் கொப்புளம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக உங்கள் கால்களுக்கு பொருத்தமில்லாத ஷூக்களை அணிந்தால் கால்களில் கொப்புளங்கள் வரலாம். தோல் மற்றும் ஷூவின் இடையே தொடர்ச்சியாக உராய்வு ஏற்படுவதன் விளைவாக கொப்புளங்கள் ஏற்படுகிறது. இந்த கொப்புளங்கள் கால் விரல்கள் மற்றும் பாதங்களில் அதிகமாக காணப்படும்.
கீழ் முதுகு வலி
நடைபயிற்சி என்பது ஒருவருடைய தோரணை மற்றும் கீழ் முதுகு தசைகளை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது. ஆனால் நடைப்பயிற்சியை சரியான விதத்தில் செய்யாவிட்டால் அதனால் முதுகு வலி வரலாம். சமநிலை இல்லாத தளம் மற்றும் மோசமான தோரணையுடன் நடப்பது அதாவது முதுகை வளைத்துக் கொண்டு கூன் விழுந்தவாறு நடப்பது அல்லது முன்னோக்கி குனிந்தவாறு நடப்பது போன்றவை கீழ் முதுகு வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்.
தோள்பட்டை வலி
கரடு முரடான அல்லது கடினமான சாலைகள் சருக்கல்களில் மேல் நோக்கி நடப்பது அல்லது கீழ்நோக்கி நடப்பது போன்றவற்றின் விளைவாக தோள்பட்டையில் வலி உண்டாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எலும்பு முறிவு போன்ற மோசமான காயங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது ஒரு நல்ல முடிவு தான். ஆனால் அதனை நீங்கள் சரியான முறையில் செய்வது அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.