பேக்கிங் என்பது பலருக்கு மிகவும் பிடித்தமான சமையல் முறையில் ஒன்று. கேக், பிரெட் போன்றவற்றை பேக் செய்யும் பொழுது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான். ஆனால் பேக் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு பொருளாக அமைவது மைதா. இந்த மைதா நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட மாவை அடிக்கடி சாப்பிடுவது நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரித்து, அதனால் இன்சுலின் உணர்திறன் மற்றும் வகை 2 டயாபடிஸ் பிரச்சனையை உருவாக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் மைதாவில் எந்த ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து கிடையாது. இதனால் இதனை சாப்பிட்ட பிறகு நமக்கு செரிமான கோளாறுகள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகளை சாப்பிடுவது பல்வேறு நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆகவே மைதாவுக்கு பதில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வேறு சில ஆரோக்கியமான மாவு வகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதாம் மாவு
பாதாம் மாவு என்பது பேக்கிங் செய்வதற்கு மைதாவிற்கு பதில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆரோக்கியமான பொருள். புரோட்டின், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த இந்த மாவில் நமக்கு தேவையான ஆற்றல் மற்றும் திருப்தி உணர்வு கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் பாதாம் மாவில் குளூட்டன் கிடையாது. கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், அதே நேரத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் இருக்கிறது.
தேங்காய் மாவு
மைதாவிற்கு பதில் நீங்கள் தேங்காய் மாவை தாராளமாக பயன்படுத்தலாம். நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் இருக்கும் இந்த மாவு நம்முடைய செரிமானத்தை தூண்டி, பசியை அடக்குகிறது. இதில் கலோரிகள் குறைவு மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அதிக புரோட்டின் சாப்பிடறதால சிறுநீரக கற்கள் உருவாகுமா…???
ஓட்ஸ் மாவு
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் மாவு செரிமானத்தை தூண்டி, கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. இதில் குளூட்டன் கிடையாது. கொரகொரப்பான அமைப்பு கொண்ட இந்த மாவு பேக் செய்வதற்கு சிறந்ததாகவும், ஆரோக்கியமானதும், அதே நேரத்தில் சுவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது.
முழு கோதுமை மாவு
முழு கோதுமை மாவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இதன் கொரகொரப்பு தன்மை காரணமாக பேக்கிங் செய்வதற்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி பசியை கட்டுப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.