எவ்வளோ சாப்பிட்டாலும் ஸ்லிம்மா இருக்க பெண்களின் இரகசியமான பழக்க வழக்கங்கள் என்னனு தெரிஞ்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
12 December 2024, 11:04 am

ஒரு சில பெண்கள் என்ன தான் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிட்டாலும் ஸ்லிம்மாக அவர்களுடைய உடலை மெய்ண்டெயின் செய்வதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மரபணுக்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும் கூட அது மட்டுமே அதற்கான காரணம் கிடையாது. இந்த மாதிரியான பெண்கள் பின்பற்றும் ஒரு சில வாழ்க்கை முறை சார்ந்த பழக்க வழக்கங்கள் உடலை ஃபிட்டாகவும் ஸ்லிம்மாகவும் வைக்க உதவுகிறது. அவர்களுடைய அன்றாட வழக்கங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவர்களை ஆரோக்கியமாக இருக்க செய்வது மட்டுமல்லாமல் ஃபிட்டான உடலையும் தருகிறது. அப்படி அவர்களுடைய பிட்னஸுக்கு பின்னணியில் உள்ள ரகசியமான அந்த பழக்கவழக்கங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமான உடற்பயிற்சி 

ஸ்லிம்மான உடலை மெயிண்டெயின் செய்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஜிம்முக்கு செல்லாவிட்டாலும் கூட ஏதாவது ஒரு வழியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். வீட்டு வேலைகள், யோகா மற்றும் லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது போன்ற விஷயங்களை செய்து அவர்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்வார்கள். இந்த பழக்கங்கள் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உணவு அளவு கட்டுப்பாடு 

இந்த பெண்கள் தங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிட்டாலும் அதன் அளவுகளில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஒரே நேரத்தில் அதிக உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக சிறிய மற்றும் அடிக்கடி உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இந்த மாதிரியான சரிவிகித அணுகுமுறை உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

போதுமான நீர்ச்சத்து 

உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும் பெண்களின் முக்கியமான பழக்கத்தில் நீர்ச்சத்து அடங்கும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது பசியை கட்டுப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். நாம் போதுமான அளவு தண்ணீர் குடித்து விட்டால் தேவையில்லாமல் தின்பண்டங்கள் சாப்பிடுவது குறையும். இதனால் நம்முடைய ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளல் குறைகிறது.

இதையும் படிச்சு பாருங்க: காலை எழுந்திருக்கும் பொழுதே சோர்வாக இருந்தால் எப்படி… இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி புத்துணர்ச்சியோட வேலைகளை ஸ்டார்ட் பண்ணுங்க!!!

உடல் சொல்வதைக் கேட்பது 

ஆரோக்கியமான உடல் எடையை கட்டுப்படுத்துபவர்கள் தங்களுடைய உடலின் சிக்னல்களை கவனித்து அதற்கேற்றவாறு காய்களை நகர்த்துவார்கள். பசி ஏற்படும் போது சாப்பிடுவது, வயிறு நிரம்பிய உணர்வு வந்தவுடன் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

நிம்மதியான தூக்கம் 

உடல் எடை அதிகரிக்காத பெண்களுக்கு போதுமான அளவு தூக்கம் என்பது மிகவும் அவசியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கத்தை பெறுவது பசி ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, இரவு நேரத்தில் ஏற்படும் பசியை குறைக்கும். நல்ல ஓய்வு பெற்ற உடலில் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறும். இதனால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Dhanush new movie announcement தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!