இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் முக்கிய உணவுப் பழக்கங்கள்?

Author: Kumar
4 October 2024, 1:53 pm

வணக்கம் மக்களே! இதயம் நம்ம உடலின் முக்கியமான உறுப்பு. இதய பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால் முன்னெச்சரிக்கையாகவே கவனிக்க வேண்டும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க தினசரி உணவில் சில மாற்றங்கள் செய்யலாம்.

முதலில், சிவப்பு இறைச்சி மற்றும் காபியை தவிர்க்குங்கள். ஜங்க் உணவுகளும் இதயத்திற்கு மோசமானது. அதற்கு பதிலாக சிட்ரஸ் பழங்களை (ஆரஞ்சு, எலுமிச்சை) சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதய அடைப்பை தடுக்க உதவும்.

Health Tips Tamil - Update News 360

மேலும், வால்நட் போன்ற நறுமண பருப்புகளை தினமும் உணவில் சேருங்கள். இதில் புரதம், நார் சத்து, வைட்டமின்கள் மற்றும் ஒமேகா அமிலங்கள் உள்ளன. இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இது முக்கியம். தக்காளியில் உள்ள லைகோபின் கொழுப்பை குறைத்து இதயத்தை பாதுகாக்கும். கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

மேலும் படிக்க: இதயத்தை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்!!!

ஆலிவ் எண்ணெய் மற்றும் சாலமன் மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேருங்கள். இதய நோய்களின் ஆபத்தை குறைக்க இது உதவும். எளிய மாற்றங்களால் இதயத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 117

    0

    0