நாள் முழுவதும் எனர்ஜடிக்கா இருக்க நொறுக்கு தீனிக்கு பதிலா இத சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
29 October 2024, 10:44 am

பொதுவாக வேலை செய்யும் பொழுது ஏதாவது கொறித்து கொண்டே இருக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும். ஆனால் இந்த சமயத்தில் நாம் சிப்ஸ், குக்கீஸ், இனிப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற பண்டங்களை சாப்பிட்டு தவறு செய்கிறோம். இது நம்முடைய ஆற்றலை எந்த விதத்திலும் அதிகரிக்காது. அது மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். ஆகவே இந்த மாதிரி சமயத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான சில தின்பண்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம் பருப்பு, வால்நட், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த தின்பண்டங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது உங்களுக்கு தொடர்ச்சியான ஆற்றலை வழங்கி, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும். இதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. 

கிரேக்க தயிரில் பெர்ரி பழங்கள் 

கிரேக்க தயிர் என்பது அதிக புரோட்டீன் நிறைந்த ஒன்று. பெர்ரி பழங்களை பொருத்தவரை அதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம். இந்த காம்பினேஷன் நம்முடைய சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நாள் முழுவதும் நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கான பெரு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. 

பீனட் பட்டருடன் ஆப்பிள் துண்டுகள் 

ஆப்பிள் பழங்கள் உங்களுக்கு இயற்கை சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்தை வழங்கும். அதே நேரத்தில் பீனட் பட்டரின் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இந்த தின்பண்டம் உங்களுக்கு உடனடி ஆற்றலை வழங்கி புரோட்டீன் மற்றும் கொழுப்புகளிலிருந்து தொடர்ச்சியாக ஆற்றல் கிடைப்பதை உறுதி செய்கிறது. 

வேக வைத்த முட்டைகள்

தரமான புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அத்தியாவசியமான வைட்டமின்களின் சிறந்த மூலமான இது உங்களுக்கு நிலையான ஆற்றலை அளிக்கிறது. மேலும் இதனை தயார் செய்வது மிகவும் எளிது  

பழங்களுடன் காட்டேஜ் சீஸ் காட்டேஜ் சீஸில் ஏராளமான புரோட்டீன் மற்றும் கால்சியம் உள்ளது. பீச், அன்னாசிப்பழம் போன்ற பல வகைகளில்  இயற்கையான இனிப்பு சுவை மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த காம்பினேஷன் உங்களுடைய ரத்த சர்க்கரையை சமநிலையாக்கி, தேவையான ஆற்றலை அளிக்கும். 

இதையும் படிக்கலாமே: இந்த காய்கறிகளை உறைய வைத்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் டபுள் ஆகுமாம்!!!

குறைந்த சர்க்கரை எனர்ஜி பார்கள் 

முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் கொண்டு குறைவான அளவில் சர்க்கரை சேர்த்து செய்யப்பட்ட எனர்ஜி பார்களை தேர்வு செய்து நீங்கள் சாப்பிடலாம். இவற்றில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு உடனடி ஆற்றில் கிடைக்கும். 

பயிர் வகைகள்

கொண்டைக்கடலை, பச்சை பயிர், கொள்ளு போன்ற பயிர் வகைகளை ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம். இவற்றில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம். இவை குறைந்த கலோரி அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கிறது. இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளித்து நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. 

நட்ஸ் மற்றும் பழங்களுடன் ஓட்மீல் 

ஓட்மீல் என்பது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு ஆற்றலை வழங்கும் மெதுவாக செரிமானமாகும் ஒரு கார்போஹைட்ரேட். இதில் நட்ஸ் மற்றும் பழங்களை சேர்ப்பது இந்த கலவையில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு தேவையான ஆற்றல் மற்றும் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதற்கு இது ஒரு அற்புதமான தின்பண்டம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 204

    0

    0