சுவையும் மணமும் பன்மடங்கு அதிகரிக்க டீ செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்…!!!

Author: Hemalatha Ramkumar
15 May 2023, 6:18 pm

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அனைவராலும் விரும்பி பருகப்படும் பானம் தேநீராகும். ஒரு சிலருக்கு தேநீர் இல்லாத காலையை நினைத்துக் கூட பார்க்க இயலாது. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரை தேநீரானது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் அமைகிறது. இருப்பினும் தேநீரில் காணப்படும் காஃபின் நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. இது அமிலத்தன்மை மற்றும் பல ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கும். எனினும், காஃபின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க ஒரு சில மூலிகைப் பொருட்களை தேநீரில் சேர்ப்பது உதவக்கூடும். அது என்ன மாதிரியான பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேநீர் தயாரிக்கும் பொழுது அதில் ஒரு பட்டையை இடித்து சேர்ப்பது தேநீரின் சுவை அதிகரிப்பதோடு அதனை ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. பட்டையில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இந்த தேநீரை ஆரோக்கியமான பானமாக மாற்றுகிறது. மேலும் இந்த தேநீர் ஒருவரின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை தூண்டுகிறது. சளி, இருமல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் பட்டை சேர்த்து தேநீரை குடிப்பது உதவும்.

கிராம்பு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். தேநீரில் கிராம்பு சேர்த்து பருகுவது ஒருவரின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு தசை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் கிராம்பு டீயானது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பலருக்கு டீயில் இஞ்சி சேர்த்து பருகும் பழக்கம் உண்டு. இஞ்சி டீ நம்மை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது. இது ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ஒரு பானம் ஆகும். இது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் சளி, இருமல் போன்றவைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

இஞ்சி போலவே ஏலக்காயும் தேநீரின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் தேநீரை ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. வீக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க அன்றாடம் ஏலக்காய் டீ குடிப்பது உதவும். செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏலக்காய் டீ குடிக்கலாம். மேலும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஏலக்காய் டீ உதவுகிறது. வாய் துர்நாற்றத்தால் சங்கடத்தை அனுபவிப்பவர்கள் ஏலக்காய் டீ குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!