கீல்வாத நோயாளிகளுக்கு உதவக்கூடிய சிறப்பு வாய்ந்த மூலிகைகள்!!!

Author: Hemalatha Ramkumar
15 February 2023, 12:17 pm

ஒரு நிபுணரின் கூற்றுப்படி, இந்தியாவில் 180 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சியுடன் இணைந்த உணவுமுறை மாற்றங்கள் மூட்டு வலியைக் குறைக்க உதவும். கீல்வாதம் என்பது மூட்டுகளில் வீக்கம் அல்லது விறைப்பு ஆகியவற்றால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும்.

வலியைக் குறைக்கவும் நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும் சில மூலிகைகள் உள்ளன. மூட்டு வலியைப் போக்கக்கூடிய மூலிகைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கற்றாழை: இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கற்றாழை ஜெல்லில் ஆந்த்ராக்வினோன்களால் நிரம்பியுள்ளது. இது மூட்டுவலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள்: மஞ்சளின் முக்கிய மூலப்பொருளான குர்குமின், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

தைம்: இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

இஞ்சி: இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் லுகோட்ரியன்கள் எனப்படும் அழற்சி மூலக்கூறுகளை அடக்கும் திறன் மற்றும் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் புரோஸ்டாக்லாண்டின்களை ஒருங்கிணைக்கும் திறன் உள்ளது.

பூண்டு: பூண்டில் டயல் டிசல்பைடு உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு சேர்மமாகும். இது அழற்சிக்கு சார்பான சைட்டோகைன்களின் விளைவுகளை குறைக்கிறது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?