உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அதிக உப்பு கொண்ட உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
7 February 2023, 1:22 pm

டேபிள் சால்ட் ருசியை அதிகரிக்கிறது. ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக உப்பு நிறைந்த உணவுகள் நமக்கு நல்லதல்ல. அதிக உப்பு உட்கொள்வது மாரடைப்பு, இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் மற்றும் அடிக்கடி தலைவலி வரலாம். அந்த வகையில் தீங்கு விளைவிக்கும் சில அதிக உப்பு கொண்ட உணவுகள் சிலவற்றைப் பார்ப்போம்:

சோயா சாஸ்:
இதில் சோடியம் அதிகமாக உள்ளது. சுமார் 1 தேக்கரண்டி சோயா சாஸில் கிட்டத்தட்ட 1000 mg சோடியம் உள்ளது.

ஊறுகாய்:
ஒரு நடுத்தர அளவிலான ஊறுகாயில் சுமார் 785 மி.கி சோடியம் உள்ளது.

சாலட் டிரஸ்ஸிங்ஸ்:
ஒவ்வொரு தேக்கரண்டி சாலட் டிரஸ்ஸிங்கிலும், சுமார் 150 மில்லிகிராம் சோடியம் உள்ளது. எனவே, சோடியம் குறைவாகவும், எளிதாக செய்யக்கூடிய DIY டிரஸ்ஸிங்கைத் தேர்ந்தெடுக்கவும். ஆலிவ் எண்ணெய் மற்றும் வினிகர் கொண்டு வீட்டிலே சாலட் டிரஸ்ஸிங் செய்யலாம். இந்த டிரஸ்ஸிங்கை ஆரோக்கியமாக்க, சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் மட்டும் சேர்க்க வேண்டும்.

பதிப்படுத்தப்பட்ட காய்கறி சாறுகள்:
ஒரு கப் பதப்படுத்தப்பட்ட காய்கறி சாற்றில் சுமார் 400 மி.கி சோடியம் உள்ளது. ஆகவே, பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை விட ஃபிரஷான காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.

பதப்படுத்தப்பட்ட சீஸ்:
பதப்படுத்தப்பட்ட சீஸில் அதிக அளவு உப்பு உள்ளது. ஆகவே முடிந்த வரை இயற்கை சீஸ் பயன்படுத்தவும்.

பீட்சா:
பீட்சா துண்டுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் பல பொருட்களில் அதிக சோடியமும் ஒன்று.

  • Ethirneechal 2 updates எதிர்நீச்சல் 2-வில் இவரா…லீக்கான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்..!
  • Views: - 428

    0

    0