ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனைக்கு டா-டா சொல்ல ஆசையா இருந்தா இந்த ஃபேஷியல் டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
25 November 2024, 11:12 am

ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது சருமத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் ஏற்படும் அதிகப்படியான மெலனின் உற்பத்தி காரணமாக கருமையான திட்டுக்கள் தோன்றுவது. இது முகப்பருக்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் UV கதிர்கள் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் இருந்தால் அதற்கு பல்வேறு சிகிச்சைகள் கிடைக்கிறது. எனினும் இதனை சமாளிப்பதற்கு இயற்கையான தீர்வுகள் ஏதேனும் நீங்கள் தேடி வருகிறீர்கள் என்றால் உங்களுக்கான ஹைப்பர் பிக்மென்டேஷன் பேஷியல்கள் சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இது பிக்மென்டேஷன் பிரச்சனையை போக்குவது மட்டுமல்லாமல் சருமத்தின் தொனி மற்றும் அமைப்பையும் மேம்படுத்தும். 

மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் 

மஞ்சள் மெலனின் உற்பத்தியை குறைத்து சருமத்தை பளிச்சிட செய்யும். அதே நேரத்தில் தயாரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம். 

எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஷியல் 

எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் C காரணமாக கரும்புள்ளிகளை வெண்மையாக்குகிறது. மேலும் தேன் சருமத்தை ஆற்றி அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த ஃபேஷியல் செய்வதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தும் பொழுது அது கண்களில் பட்டுவிடாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

கற்றாழை ஃபேஷியல்

கற்றாழையில் உள்ள அலோயின் என்ற காம்பவுண்ட் பிக்மென்டேஷனை குறைத்து சருமத்தை ஆற்றுகிறது. இதனை செய்வதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் ஃபிரஷான கற்றாழை சாறு சிறிதளவு எடுத்து நேரடியாக உங்கள் முகத்தில் தடவலாம். 20 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடுங்கள். 

இதையும் படிக்கலாமே:  பிரக்னன்சி டெஸ்டிற்கு முன்னரே உங்க கர்ப்பத்தை கன்ஃபார்ம் பண்ண உதவும் அறிகுறிகள்!!!

பப்பாளி மற்றும் தேன் ஃபேஷியல் 

பப்பாளியில் உள்ள என்சைம்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. மேலும் தேன் சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. இதற்கு பப்பாளி பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஷியல் 

ஓட்ஸ் இறந்த செல்களை அகற்றும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. இதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரில் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்யவும். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும். 

அரிசி தண்ணீர் டோனர்

அரிசி தண்ணீரில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சருமத்தின் அமைப்பு மற்றும் தொனியை மேம்படுத்தும். இதனை செய்வதற்கு 1/2 கப் அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அதனை ஒரு காட்டன் பேடில் முக்கி முகத்திற்கு பயன்படுத்தவும். 

எளிமையான மற்றும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி செய்யப்படுவதால் இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இதனை தொடர்ச்சியாக நீங்கள் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பளிச்சென்று மாறும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 125

    0

    0