மழைக்காலம் வந்தாச்சு… எந்த ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க காலை எழுந்ததும் முதல் வேலையா இத குடிங்க…!!!

Author: Hemalatha Ramkumar
13 October 2022, 3:44 pm

மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் கூடவே நோய்களும் வர ஆரம்பித்து விடும் என்பது நமக்கு தெரியும். இவைகளிடம் இருந்து தப்பிக்க நம் உடலை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நம் உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

வலுவான நோயெதிர்ப்பு அமைப்ப உருவாக்க உதவும் ஒரு டானிக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டானிக்:-

தேவையான பொருட்கள்:
* 1 கப் தண்ணீர்

* ¼ தேக்கரண்டி துருவிய இஞ்சி

* ¼ தேக்கரண்டி மஞ்சள்

* 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்

* 1 தேக்கரண்டி தேன்

இதை எப்படி செய்வது?

ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர், இஞ்சி, மஞ்சள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பை அணைத்து, கலவையை சிறிது ஆறவிடவும். அதை வடிகட்டி, பானத்தில் தேன் சேர்க்கவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டானிக் தயாராக உள்ளது.

  • Keerthy Suresh Bollywood debut கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!
  • Views: - 446

    0

    0