வெயிட் குறையவே மாட்டேங்குதுன்னு சொல்ல இனி சான்சே இல்ல… அப்படி ஒரு ரிசல்ட் கொடுக்கும் இந்த பானம்!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2024, 3:48 pm

விடாபடியாக குறையவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் உங்களுடைய தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு எவ்வளவு காசு செலவானாலும் பரவாயில்லை. சப்ளிமெண்டுகள், வெயிட் லாஸ் ட்ரிங்குகள், பவுடர் போன்றவற்றை நீங்கள் வாங்குவதற்கு தயாராக இருந்தால் ஒரு நிமிடம் இந்த பதிவை படித்துவிட்டு அதன் பிறகு முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே உங்களின் உடல் எடை இழப்பு பயணத்தில் அதிசயத்தை நிகழ்த்தலாம். உங்களுடைய உடல் எடையை எளிமையான வழியில் குறைக்க உதவும் பானங்களை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். 

இலவங்கப்பட்டை மற்றும் தேன் 

தேனின் இனிப்பு சுவையுடன் பட்டையின் கதகதப்பு கலந்த ஒரு பானத்தை தயார் செய்து இரவு நேரத்தில் குடிக்கும்போது அது உங்களுடைய ரத்த சர்க்கரையை அளவை சீராக்கி, தூங்கும் போது உங்களுடைய கொழுப்பை எரிக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இந்த பானத்தை தயார் செய்ய ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 முதல் ஒரு டீஸ்பூன் பொடித்த இலவங்கப்பட்டை சேர்த்து 2 நிமிடங்கள் காத்திருந்து பிறகு பருகவும். 

இதையும் படிக்கலாமே: நீங்க சிரிச்சா மட்டும் போதும்… நோயில்லாம ஜாலியா வாழலாம்!!!

நெய் காபி 

புல்லட் ப்ரூஃப் காபி என்று பிரபலமாக அறியப்படும் இந்த நெய் காபி உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, வேறு தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கான ஆசையை கட்டுப்படுத்துகிறது. பல செலிபிரிட்டிகள் இந்த பானத்தை தங்களுடைய உடல் எடை குறைப்பு டயட்டில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த காபி செய்வதற்கு முதலில் ஒரு கப் காபியை தயார் செய்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இனிப்பு சுவைக்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து கலந்து கொள்ளலாம். இதனை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக நுரை பொங்கும் வரை கலந்து கொள்ளவும். 2 நிமிடங்கள் கழித்து சுவையான இந்த காபியை குடித்து மகிழுங்கள். 

சீரகத் தண்ணீர் 

இந்த எளிமையான உடல் எடை குறைப்பு பானம் நீங்கள் நினைத்த மாதிரியான ஃபிட்டான உடலை தருவதற்கு உதவும். சீரகம், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றால் செய்யப்படும் இந்த பானம் உங்களுடைய கொழுப்பு எரிக்கும் செயல்முறையை விரைவாக்கி ஸ்லிம்மான உடலை பெற உதவுகிறது. இதன் முடிவுகளை அதிகப்படுத்த இந்த பானத்தோடு சேர்த்து வழக்கமான உடற்பயிற்சியையும் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களுடைய உடல் எடை விரைவாக குறையும். இதனை செய்வதற்கு ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 3 டீஸ்பூன் இடித்த சீரகத்தை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். சீரகத்தின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 157

    0

    0