BP அதிகமாவத நினைச்சா கவலையா இருக்கா… டென்ஷன விடுங்க… இருக்கவே இருக்கு மூலிகை வைத்தியங்கள்!!!
Author: Hemalatha Ramkumar25 September 2024, 4:03 pm
ஹைப்பர் டென்ஷன் என்பது இன்று உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்கள் அனுபவித்து வரும் ஒரு பொதுவான உடல்நலக் கோளாறு. ஹைப்பர் டென்ஷன் என்பது அதிக ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பல்வேறு பாரம்பரியமான சிகிச்சைகள், அதாவது மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியமானதாக கருதப்பட்டாலும் ஒரு சிலர் தங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கூடுதலாக மூலிகை வைத்தியங்களை நாடுகின்றனர். மூலிகை வைத்தியங்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு இதயம் உடல்நல பிரச்சனைகளை சமாளிப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயற்கை சிகிச்சைகள் ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளதாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய சில மூலிகை வைத்தியங்களை பற்றி பார்க்கலாம்.
பூண்டு
பூண்டில் காணப்படும் ஆக்டிவ் காம்பவுண்டுகள் அதிலும் குறிப்பாக அலிசின் என்ற காம்பவுண்ட் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பூண்டை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது சப்ளிமெண்டாகவோ வழக்கமான முறையில் எடுத்து வர உங்களுடைய ரத்த அழுத்த அளவுகளில் நல்ல மாற்றத்தை எதிர் பார்க்கலாம்.
மேலும் படிக்க: சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதை உணர்த்தும் அறிகுறிகள்!!!
செம்பருத்தி பூ
தினமும் செம்பருத்தி பூ டீ பருகுவது சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்த அளவுகளை குறைக்கும். செம்பருத்திப்பூ என்பது லிப்பிடுகளை மேம்படுத்தி இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. செம்பருத்தி பூக்களின் பலன்களை பெறுவதற்கு ஒரு சில காய்ந்த செம்பருத்தி பூக்களை சுடுதண்ணீரில் சேர்த்து அதன் சாறு இறங்கியதும் அதனை நீங்கள் பருகலாம் அல்லது கமர்ஷியலாக கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹைபிஸ்கஸ் டீ பேகுகளை வாங்கி பயன்படுத்தலாம்.
ஆலிவ் இலை
ஆலிவ் இலைகளில் காணப்படும் ஆலிரோபின் என்பது ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஆலிவ் இலை ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிப்பதற்கும் உதவி புரிகிறது.
செலரி விதைகள்
செலரி விதைகள் திரவ தக்கவைப்பு திறனை குறைத்து அதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் செலரி விதைகளில் உள்ள காம்பவுண்டுகள் ரத்த நாளங்களை ஓய்வடைய செய்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் கடைகளில் கிடைக்கும் சப்ளிமெண்ட்களை பயன்படுத்தலாம். வழக்கமான முறையில் இதனை எடுத்து வர உங்களுடைய ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
ஹவ்தார்ன் அல்லது இதயக்கனி
ஹவ்தார்ன் தாவரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் ஃபிளவனாய்டுகள் மற்றும் அலிகோமெரிக் ப்ரோஆந்தோசயானிடின்ஸ் இருப்பதால் இவை இதய செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக இதயம் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.