மாதவிடாய் வலியை சட்டென்று மறையச் செய்யும் எளிமையான பானங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
3 August 2022, 3:59 pm

மாதவிடாய் பிடிப்புகள் மிகவும் மோசமான வலியை தரக்கூடியவை. இந்த பிடிப்புகள் புரோஸ்டாக்லாண்டின்கள், கருப்பையின் தசைகள் மற்றும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும் இரசாயனங்களால் ஏற்படுகின்றன.

இந்த மாதாந்திர வலியை மருந்துகளைப் பயன்படுத்தாமல் சமாளிக்க உதவும் சில எளிமையான வீட்டு வைத்லியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பல உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் மாதவிடாய் வலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் தரலாம்.

இஞ்சி-மஞ்சள் தேநீர்:
இஞ்சி காரமானது போல் தோன்றலாம். ஆனால் சரியான அளவில் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். வலி மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும் புரோஸ்டாக்லாண்டின்களின் அளவைக் குறைப்பதில் இது ஒரு பங்கு வகிக்கிறது. மாதவிடாய் வலியுடன் அடிக்கடி ஏற்படும் குமட்டலைத் தடுக்கவும் இஞ்சி உதவும். மஞ்சள் உடலின் தசைகளை தளர்த்தவும், வலிமிகுந்த கருப்பைச் சுருக்கங்களைத் தடுக்கவும் உதவுகிறது.

எப்படி செய்வது? தோராயமாக ஒரு அங்குல இஞ்சியை நசுக்கி இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். உங்களிடம் புதிய மஞ்சள் வேர் இருந்தால், அதில் ஒரு அங்குல துண்டு பயன்படுத்தவும். இதை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடிக்கவும். நீங்கள் விரும்பினால், ஒரு டீஸ்பூன் தேன் அல்லது எலுமிச்சை சாற்றினை பிழிந்திக் கொள்ளலாம்.

ஓமம் & வெல்லம் டிகாஷன்:
ஓமம் ஒரு மென்மையான மசாலா ஆகும். இது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். இது உங்கள் இரைப்பைக் குழாயை பலப்படுத்துகிறது மற்றும் செரிமான பிரச்சினைகளை எளிதாக்குகிறது. இதன் காரணமாக மாதவிடாயின் விளைவாக ஏற்படும் வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவற்றைக் குறைக்கிறது. வெல்லம் மாதவிடாய் வலிக்கு சிறந்த வீட்டு வைத்தியம். இதில் அதிக அளவு இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவை சீராக்க உதவுகிறது. இது இரத்த இழப்பு காரணமாக பலவீனத்தைத் தடுக்கிறது.

எப்படி செய்வது? ஒரு டீஸ்பூன் ஓமம் விதைகளை ஒரு தேக்கரண்டி வெல்லத்துடன் இரண்டு முதல் மூன்று கப் தண்ணீரில் எட்டு நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை வடிகட்டி குடிக்கவும்.

பெருஞ்சீரகம் டிகாஷன்:
பெருஞ்சீரகம் விதைகள் உணவுக்குப் பிறகு ஒரு சுவையான வாய் புத்துணர்ச்சியை உருவாக்குவது மட்டுமல்லாமல், மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் பயன்படுத்தலாம். பெருஞ்சீரகம் விதைகளில் செயல்படும் பொருளான அனெத்தோல், புரோஸ்டாக்லாண்டின்களால் தூண்டப்படும் கருப்பைச் சுருக்கங்களைத் தடுக்கிறது. பெருஞ்சீரகம் உடலில் நீர் தேங்குவதைத் தடுக்கவும் உதவும்.

எப்படி செய்வது? இரண்டு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரை குடிக்கவும். விதைகளை குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைத்த மறுநாளில் இதை மீண்டும் செய்யலாம்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 791

    0

    0