மழைக்காலத்தில் ஏற்படும் ஆஸ்துமா தொல்லைகளில் இருந்து விலகி இருக்க நீங்க செய்ய வேண்டியது!!!
Author: Hemalatha Ramkumar9 October 2022, 6:37 pm
மழைக்காலம் என்பது மனதிற்கு ஒரு வித மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது பல ஆபத்துகளை கூடவே கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்துமா பிரச்சினையினால் அவதிப்படுபவர்களுக்கு மழைக்காலம் ஒரு சவாலான நேரமாக இருக்கும். தினமும் ஆஸ்துமா பிரச்சினையினால் அவதிப்படும் போது, மருந்து மாத்திரைதளை எடுப்பது உங்களை.அதற்கு அடிமையாக்கி விடும். ஆகவே லேசான மூச்சு பிரச்சினை இருக்கும் போதே, ஒரு சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.
ஆஸ்துமாவுக்கு வீட்டு வைத்தியம்:
கற்பூரத்தி எண்ணெய்:
கற்பூரத்தி எண்ணெய் ஆஸ்துமாவுக்கு உதவும். இது மார்பில் குவிந்திருக்கும் சளியைப் போக்க உதவுவதோடு சுதந்திரமாக சுவாசிக்கவும் உதவும். இதற்கு உங்கள் முதுகு மற்றும் மார்பில் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.
பிராணாயாமம்:
இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கான சுவாசப் பயிற்சிகளைக் குறிப்பிடுகிறது. இந்த பயிற்சிகள் சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும். இது ஆஸ்துமாவுக்கு உதவக்கூடும். மேலும் அவை மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவக்கூடும்.
கிராம்பு:
கிராம்பு ஆஸ்துமாவுக்கு உதவக்கூடும். ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெற கிராம்பு, சில துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவை கொண்டு செய்யப்பட்ட கஷாயத்தைக் குடிக்கலாம்.
0
0