முதுகு வலியை போக்க இது தான் சரியான வீட்டு வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
15 January 2025, 11:16 am

முதுகு வலி என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கக்கூடிய ஒரு மோசமான பிரச்சனையாகும். இது ஒருவருடைய அன்றாட வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கக் கூடியதாக அமைகிறது. இந்த நவீன கலாச்சாரத்தின் காரணமாக நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் காரணமாக பலருக்கு இந்த முதுகு வலி பிரச்சனை ஏற்படுகிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறை என்பது மோசமான தோரணை மற்றும் போதுமான அளவு உடல் செயல்பாடு இல்லாததால் நாள்பட்ட முதுகு வலியை உண்டாக்குகிறது.

வலுவிழந்த தசைகள் மற்றும் குறைவான நெகிழ்வுத்தன்மை ஆகியவை முதுகு வலி உருவாவதற்கு பங்களிக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் இந்த அசௌகரியம் அடுத்த நிலைக்கு சென்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்து விடும். எனவே உங்களுடைய முதுகு வலிக்கு இயற்கையான முறையில் வீட்டில் இருந்தபடியே எப்படி தீர்வு காண்பது என்பதை பார்க்கலாம்.

எளிமையான அசைவுகள்

எளிமையான அசைவுகள் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது உங்களுடைய முதுகு வலியை குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள ஒரு வழியாகும். யோகா, நீட்சி மற்றும் குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக் பயிற்சிகள் ஆகியவை தசையில் உள்ள பதட்டத்தை குறைத்து, அதற்கு வலு சேர்த்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கும். இறுதியாக உங்களுடைய முதுகு வலி மற்றும் அசௌகரியம் குறையும்.

சூட்டு ஒத்தடம் 

பாதிக்கப்பட்ட பகுதியில் ஹீட் பேச் அல்லது சூடான பாட்டில் வைப்பது முதுகு வலியில் இருந்து நிவாரணம் தரும். இந்த சூடு ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளுக்கு ஓய்வலித்து இறுக்கத்தை குறைக்கும் எனினும் எரிச்சல் அல்லது தோலில் சேதங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு போதுமான அளவு இடைவெளி விட்டு இந்த வெப்ப சிகிச்சையை பயன்படுத்துவது அவசியம்.

எண்ணெய் மசாஜ் 

சூடான எண்ணெயுடன் உங்களுடைய முதுகு பகுதியை மசாஜ் செய்வது முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிமையான ஒரு வழி. இந்த எண்ணெயில் உள்ள வெப்பம் தசைகளுக்குள் ஊடுருவி நாரிழைகளுக்கு ஓய்வளித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்களுடைய தோலில் பொறுமையாக எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே : இந்த பழக்கம் இருக்கவங்களுக்கு சீக்கிரமே வயசான தோற்றம் வந்துவிடுமாம்!!!

மஞ்சள் பால் 

முதுகு வலிக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக இந்த மஞ்சள் பால் அமைகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற காம்பவுண்ட் வீக்க எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண பண்புகளை கொண்டுள்ளது. ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து பருகுவது முதுகு வலியில் இருந்து நிவாரணம் தந்து வீக்கத்தை குறைத்து இயற்கை நிவாரணம் தரும்.

தூங்கும் போது சரியான தோரணை 

சரியான தோரணையில் தூங்குவது முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான ஒரு இயற்கை வழி. உங்களுடைய மூட்டிகளின் கீழ் ஒரு தலையணையை வைத்து படுப்பது முதுகு தண்டில் உள்ள அழுத்தத்தை எடுத்து, வலியை குறைக்கும். மேலும் முதுகின் கீழ் ஒரு தலையணை வைப்பதும் அசௌகரியத்தை குறைக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!
  • Leave a Reply