தூக்கத்தை கெடுக்கும் தொடர்ச்சியான இருமலில் இருந்து விடுபட உதவும் இன்ஸ்டன்ட் கைவைத்தியம்!!!
Author: Hemalatha Ramkumar4 February 2023, 1:15 pm
குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருமல் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் தொடர்ச்சியாக இருமல் அதிகரித்த வண்ணம் இருக்கும். இதனால் தூக்கம் கெட்டு போகும். இருப்பினும், இது பற்றி பயப்பட ஒன்றுமில்லை. இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் நீக்கலாம்.
●உலர்ந்த இஞ்சியை சாப்பிடுங்கள்:
உலர்ந்த இஞ்சியை இரவில் சாப்பிட்டால் இருமல் நீங்கும். அது மட்டும் அல்லாமல், பல நேரங்களில் தொண்டையில் தேங்கியிருக்கும் சளியும் அகற்றப்படும்.
●இஞ்சி தேநீர்:
சூடான டீ குடிப்பது தொண்டைக்கு நல்லது. இருப்பினும், இரவில் தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். ஆனால் இருமலுக்கு இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் பிரச்சனை இருக்காது.
●வெந்நீர்:
இரவில் தொடர்ந்து இருமல் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பருகவும். தொண்டை தொற்று குறைவதுடன், இருமல் குறையும்.
●தேன்:
தேன் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். தேன் மார்பில் உள்ள திரவத்தை அகற்றவும் உதவுகிறது. எனவே தேனை சாப்பிடுவதன் மூலமாக எளிதில் இருமலைக் குறைக்கலாம்.