கழுத்துல கருகருன்னு கோடுகள் தெரியுதா… இந்த ஒரே பொருள் போதும்… நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்துவிடும்!!!

Author: Hemalatha Ramkumar
22 November 2024, 3:54 pm

ஒரு சிலருக்கு கழுத்து பகுதியில் உள்ள சருமத்தில் கருமை நிற திட்டுக்கள் அல்லது மெல்லிய கோடுகள் இருக்கலாம். இது சூரியனிலிருந்து வெளிப்படும் UV கதிர்கள், முதுமை, மோசமான ரத்த ஓட்டம், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது மோசமான தோரணை மற்றும் சுகாதாரமின்மை போன்ற வாழ்க்கை முறை தேர்வுகள் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். கழுத்தில் உள்ள தோல் மெல்லியதாக இருந்தாலோ அல்லது முகத்தை விட மிகவும் சென்சிட்டிவாக இருந்தாலும் அதனால் கரும்புள்ளிகள் அல்லது சமமற்ற பிக்மென்ட்டேஷன் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் இதனை சரி செய்வதற்கு உதவும் பல்வேறு வீட்டு வைத்தியங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து பின்பற்றி வர கழுத்தில் உள்ள கருமை நிறக் கோடுகளை குறைக்கலாம் அல்லது நிரந்தரமாக விடுபடலாம். அவ்வாறான சில இயற்கையான வழிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

கழுத்தில் உள்ள கருமையான கோடுகளை போக்கும் வீட்டு வைத்தியங்கள்:- 

எலுமிச்சை சாறு மற்றும் தேன் மாஸ்க் 

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேனில் 1/2 மூடி எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை கழுத்தில் உள்ள கருமையான பகுதிகளில் தடவவும். எனினும் கண்கள் மற்றும் கண்களை சுற்றி உள்ள மென்மையான பகுதிகளை தவிர்த்து விடவும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

கற்றாழை 

கழுத்தில் உள்ள கருமை நிறக் கோடுகளை குறைப்பதற்கு நீங்கள் கற்றாழை சாற்றை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் சுத்தமான கற்றாழை சாறு அல்லது ஆர்கானிக் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். கழுத்தில் உள்ள கருமை பகுதிகளில் இந்த கற்றாழை சாற்றை தடவி அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் உங்கள் சருமம் உறிஞ்சுவதற்கு பொறுமையாக அதனை மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். 

இதையும் படிக்கலாமே: இந்த சீசனுக்கு வெந்நீர்ல குளிக்கிறது நல்லா தான் இருக்கும்… ஆனா அதனால இப்படி கூட பிரச்சினை வரலாம்!!!

பால் மற்றும் மஞ்சள் பேஸ்ட் 

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளில் போதுமான அளவு பால் கலந்து தடினமான பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். பின்னர் இதனை கழுத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். கலவை நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுத்தை கழுவலாம். 

தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயை தடவுவதற்கு நீங்கள் தூய்மையான தேங்காய் எண்ணெயை உங்கள் உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளையும் ஒன்றாக தேய்த்து பின்னர் அதனை உங்கள் கழுத்தில் உள்ள கருமையான புள்ளிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவும் வரை 5 முதல் 10 நிமிடங்கள் காத்திருக்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 118

    0

    0