வாயுத்தொல்லை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபட உதவும் கை வைத்தியம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
வாயுத்தொல்லை ஏற்பட காரணங்கள்:
*புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் வாயுத் தொல்லை ஏற்படும். எனவே, புரத உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதை எப்போதும் வழக்கமாக வையுங்கள்.
*உப்பு, காரம், மசாலா ஆகியவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.
*புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது, அவற்றை வேகவைத்து சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறத்த உணவுகளை சாப்பிட்டால் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.
*மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் ஆகியவைவாயுத் தொல்லையை உண்டாக்கக்கூடியவை. ஆகவே, அவற்றை தவிர்ப்பது அல்லது கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பத்தால் வாயுவைக் குறைக்கும்.
*அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். ஆகவே,அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.
வாயுத்தொல்லை நீங்க செய்ய வேண்டியவை:
* சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
*சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
* சீரகம் கலந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.
*ஓமம், கசகசா மற்றும் சுக்கு இவற்றை சம அளவு எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.
* வெள்ளைப் பூண்டினை பசும்பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும் பாலையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் சரியாகி விடும்.
*புதினாப்பொடியாகவும், புதினாவை துவையலாகவும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயுத்தொல்லை குறையும்.
* வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உடனடியாக சாப்பிட்டால் கட்டுப்படுத்தி விடலாம்.
* சிறிதளவு பெருஞ்சீரகத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, பின் மிதமான சூட்டில் அந்த நீரை ஒரு டம்ளர் அருந்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். வாயுவைப் போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம்.
*துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும், மூன்று ஸ்பூன் காலை, மாலை என இரு வேலையும், மூன்று நாட்களுக்கு குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.