தசை வலியைப் போக்க என்னென்ன வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்???
Author: Hemalatha Ramkumar26 December 2022, 5:53 pm
தசை வலி பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எவருக்கும் ஏற்படலாம். கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இல்லாமல் தசை வலி ஏற்படுகிறது. இது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. இருப்பினும், சில நேரங்களில் இது ஒரு அடிப்படை நோயின் அறிகுறியாகத் தோன்றலாம். சில தீவிர காரணங்களால் தசை வலி ஏற்பட்டால், வீட்டு வைத்தியம் மூலமாகவே அதை குணப்படுத்தலாம்.
தசை வலியைக் குறைக்க உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்:-
கல் உப்பு – இதில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது மற்றும் இது இயற்கையான தசை தளர்த்தியாகும். மெக்னீசியம் தசை வலியை ஏற்படுத்தும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுகிறது. ஒரு கப் கல் உப்பை எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடவும். இப்போது பாதிக்கப்பட்ட பகுதியை இந்த நீரில் மூழ்க வைத்து அது குளிர்ச்சியடையும் வரை வைக்கவும். தண்ணீர் மிகவும் குளிராக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயாளிகள் இந்த செய்முறையை முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
ஆப்பிள் சைடர் வினிகர் – ஆப்பிள் சைடர் வினிகர் தசை வலியைப் போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கவும் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவவும். ஆப்பிள் சைடர் வினிகர் கார மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் இது தசை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
அத்தியாவசிய எண்ணெய்- எலுமிச்சை, புதினா போன்ற சில அத்தியாவசிய எண்ணெய்கள் தசைப்பிடிப்பு மற்றும் வலியைப் போக்க பயன்படுத்தப்படலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் கேரியர் எண்ணெயை (தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்) ஒரு டீஸ்பூன் எடுத்து, அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்கவும். அதைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்யவும்.
குளிர் ஒத்தடம் – உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளில் ஏதேனும் சிரமம் அல்லது வலி ஏற்பட்டால், உடனடியாக குளிர்ந்த நீரில் குளிக்கவும் அல்லது குளிர்ந்த நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். ஒவ்வொரு 24 முதல் 72 மணி நேரத்திற்கும் 20 முதல் 30 நிமிடங்கள் குளிர் ஒத்தடத்தைப் பயன்படுத்துங்கள். இது இரத்த நாளங்களைச் சுருக்கி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கிறது.
விரைவாக குணமடைய டிப்ஸ்:
*உடற்பயிற்சியின் போது தசை வலி மற்றும் பிடிப்புகளைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.
*உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் தோரணையில் கவனம் செலுத்துங்கள்.
*4 முதல் 5 நாட்களுக்குப் பிறகும் தசை வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.