குழந்தைக்குகளுக்கு அடிக்கடி ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் பிரச்சினைக்கான சிம்பிள் ஹோம் ரெமடீஸ்!!!

Author: Hemalatha Ramkumar
12 November 2024, 10:53 am

பெரியவர்களாகிய நமக்கே மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் ஏற்படுவது என்பது மிக மோசமான அனுபவமாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு இது போன்ற நிலை வரும் பொழுது அவர்கள் அதனை கையாளுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்கலாம் மற்றும் எரிச்சல் அடைவார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு மூக்கடைப்பு மற்றும் முக்கு ஓழுகுதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக இந்த குளிர் காலத்தில் அலர்ஜி அல்லது பிற தூண்டுதல்களின் காரணமாக இது போன்ற அறிகுறிகளை அவர்கள் அனுபவிக்கலாம். ஆனால் இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நீங்கள் எப்பொழுதும் மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான சில தீர்வுகளை நீங்கள் முயற்சி செய்யலாம். அவ்வாறான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம். 

ஹியூமிடிஃபையர்

காற்றில் ஈரப்பதத்தை சேர்ப்பதற்கு நீங்கள் ஒரு ஹியூமிடிஃபையரை வாங்கி பயன்படுத்தலாம். இதன் மூலமாக மூக்கடைப்பு இருந்தால் கூட உங்கள் குழந்தைகள் சுவாசிப்பதற்கு சிரமப்பட மாட்டார்கள். வறண்ட காற்று சுவாச பாதைகளை எரிச்சலடைய செய்து மூக்கடைப்பை இன்னும் மோசமாக்கும். எனவே உங்களுடைய குழந்தை இருக்கும் அறை எப்பொழுதும் ஈரப்பதத்தோடு இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அதிலும் குறிப்பாக தூங்கும் பொழுது ஹியூமிடிஃபையர் பயன்படுத்துவது மூக்கடைப்பு அவர்களுடைய தூக்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் பாதுகாக்கும். 

நீர்ச்சத்து 

மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு போதுமான அளவில் நீர்ச்சத்து பெறுவது அவசியம். தண்ணீர், சூப், மூலிகை தேநீர் போன்றவை சளியை மெல்லியதாக்கி அது எளிதாக வெளியேறுவதை உறுதி செய்யும். அதே நேரத்தில் குழந்தை எளிதாக சுவாசிக்கும்.  

நேசல் ட்ராப்ஸ் அல்லது ஸ்பிரேக்கள் 

குழந்தையின் சுவாச பாதையில் சலைன் சொல்யூஷன் அல்லது ஸ்பிரேக்களை பயன்படுத்துவதன் மூலமாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். இவை பொதுவாக சளியை தளர்த்தி அதனை மெல்லியதாக்கி எளிதில் வெளியேற உதவுகிறது. மூக்கின் ஒவ்வொரு துவாரத்திலும் ஒரு சில துளிகள் பயன்படுத்துவது உடனடி நிவாரணத்தை தரும். 

நீராவி சிகிச்சை 

நீராவியை சுவாசிப்பது மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் பெற உதவும் ஒரு பாரம்பரியமான சிகிச்சையாகும். அதே நேரத்தில் கதகதப்பான தண்ணீரில் குளிக்க வைப்பதும் அவர்களுக்கு மூக்கடைப்பை சரி செய்து கொடுக்கும். ஆனால் நீராவி சிகிச்சை கொடுக்கும் போது நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இதையும் படிக்கலாமே: புரோட்டீன் பவுடர் ஷேக் சாப்பிடுவது நல்லதா… கெட்டதா… தெளிவுபடுத்திவிடலாம்!!!

தலையை உயர்த்தி வைப்பது 

உங்கள் குழந்தை சமமாக படுக்கும் பொழுது சளி தொண்டையின் பின்பகுதிக்கு சென்று மூக்கடைப்பை இன்னும் மோசமாக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்களை படுக்க வைக்கும் பொழுது கூடுதல் தலையணை வைத்து தலையை சற்று உயர்த்தியவாறு வையுங்கள். இவ்வாறு செய்வது அவர்கள் தூங்கும் பொழுது எளிதாக சுவாசிப்பதற்கு உதவும். 

வெதுவெதுப்பான பானங்கள் 

அவ்வப்போது உங்கள் குழந்தைக்கு சூப், மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சையை கலந்து கொடுப்பது எரிச்சல் கொண்ட சுவாச பாதைகளை ஆற்றி மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் தரும். எனினும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

சூடான ஒத்தடம் 

மூக்கு அல்லது நெற்றி பகுதியில் சூடான ஒத்தடம் கொடுப்பது சைனஸ் அழுத்தத்தை குறைத்து அசௌகரியத்தை போக்கும். இதற்கு நீங்கள் மென்மையான ஒரு துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் முக்கி எடுத்து குழந்தைகளின் மூக்கு, நெற்றி மற்றும் முகம் முழுவதும் துடைக்கலாம். இது குழந்தைக்கு உடனடி நிவாரணம் தரும். 

எனினும் அறிகுறிகள் மோசமாகினால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவர் அணுகுவது அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 98

    0

    0

    Leave a Reply