பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு ஏப்பம் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சில சமயங்களில் புளித்த ஏப்பம் ஏற்படுவது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இது நெஞ்சு மற்றும் தொண்டையில் எரிச்சலையும் உண்டாக்கலாம். அதிக எண்ணெய் கலந்த உணவை சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, விரைவாக சாப்பிடுவது போன்றவை காரணமாக இந்த புளித்த ஏப்பம் வரலாம். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுமாயின் இதிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய சில வீட்டு வைத்தியங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சோம்பு
நம்முடைய வயிற்றுக்கு சோம்பு பல நன்மைகளை அளிக்கிறது. இது வாயுத்தொல்லை, அசிடிட்டி மற்றும் புளித்த ஏப்பம் பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது. சோம்பானது செரிமான நொதிகள் உற்பத்தியை அதிகரித்து, உணவு எளிமையாக ஜீரணமாவதை உறுதி செய்கிறது. எனவே உணவு சாப்பிட்ட பிறகு 1/2 டீஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள்.
புதினா டீ
சாப்பிட்ட பிறகு உங்களுக்கு வாயு மற்றும் புளித்த ஏப்பம் பிரச்சினை இருந்தால் நீங்கள் புதினா டீ பயன்படுத்தி பார்க்கலாம். புதினா இலைகளில் உள்ள குளுமை விளைவு நெஞ்செரிச்சலை ஆற்றி, அசிடிட்டி பிரச்சனையை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இது புளித்த ஏப்பம் மற்றும் வாயுவில் இருந்தும் நிவாரணம் தரும்.
இதையும் படிக்கலாமே: இதென்ன கொடுமையா இருக்கு… திங்கட்கிழமைல தான் அதிக ஹார்ட் அட்டாக் நடக்குதா… ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!!!
சீரகத் தண்ணீர்
சீரகம் செரிமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஒருவேளை சாப்பிட்ட உடனேயே உங்களுக்கு புளித்த ஏப்பம் வந்தால் சீரக தண்ணீரை குடித்து பாருங்கள். இது உங்களுடைய செரிமான அமைப்பை மேம்படுத்தி, வாயு தொல்லை, புளித்த ஏப்பம் மற்றும் அசிடிட்டி பிரச்சினைகளை விலக்கி வைக்கும். இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி கலந்து பருகவும்.
இஞ்சி
நம்முடைய வயிற்றுக்கு இஞ்சி எக்கச்சக்கமான நன்மைகளை அளிக்கிறது. அதில் ஒன்று புளித்த ஏப்பம். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் விக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இஞ்சி நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. புளித்த ஏப்பம், வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர நிவாரணம் பெறலாம்.
பெருங்காயம் தண்ணீர்
ஒருவேளை உங்களுக்கு புளித்த ஏப்பம் பிரச்சனை இருந்தால் பெருங்காயம் கலந்த தண்ணீரை பருகுங்கள். பெருங்காயமானது வயிற்று வலி, வாயு, அசிடிட்டி மற்றும் புளித்த ஏப்பம் பிரச்சனைகளை போக்குகிறது. இதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயம் சேர்த்து பருகவும். இந்த தண்ணீரை குடித்த ஒரு சில நிமிடங்களிலேயே நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.