தாறுமாறாக கொட்டும் தலைமுடியை கட்டுப்படுத்தி, நீளமான கூந்தலை பெற உதவும் ஹோம்மேடு ஹேர் ஆயில் ரெசிபிகள்!!!

Author: Hemalatha Ramkumar
27 December 2024, 10:49 am

நம் அனைவருக்குமே நல்ல அடர்த்தியான, நீளமான மற்றும் கருமையான கூந்தல் வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால் இது மன அழுத்தம், மோசமான உணவு மற்றும் சுற்றுச்சூழலின் காரணமாக பெரும் சவாலான விஷயமாக மாறுகிறது. நம்மில் பலர் தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு பல்வேறு விதமான ப்ராடக்டுகள் மற்றும் வீட்டு வைத்தியங்களை முயற்சித்து ஏமாற்றமடைந்திருக்கலாம். மார்க்கெட்டில் எக்கச்சக்கமான ப்ராடக்டுகள் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உதவுவதாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக, அவற்றில் பெரும்பாலானவை சொல்வதை செய்வது கிடையாது. ஆனால் இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். வீட்டில் இருந்தபடியே நீளமான, அடர்த்தியான மற்றும் அழகான கூந்தலை பெறுவதற்கு உதவும் சில தலைமுடி வளர்ச்சி எண்ணெய் ரெசிபிகளை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் E எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் E எண்ணெயை கலந்து பயன்படுத்துவது நம்ப முடியாத அளவுக்கு தலைமுடி வளர்ச்சியை ஏற்படுத்தும். இந்த கலவையை வெதுவெதுப்பாக்கி உங்களுடைய உள்ளங்கையில் வைத்து பொறுமையாக மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ் செய்யுங்கள். 30 நிமிடங்களுக்குப் பிறகு வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை வைத்து தலைமுடியை அலசலாம்.

ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்

ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயோடு ஆலிவ் எண்ணெயை கலந்து பயன்படுத்துவது ஒரு சிறந்த தலைமுடி வளர்ச்சி எண்ணெயாகும். இதற்கு நீங்கள் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயோடு 5 முதல் 7 துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயை சேர்க்க வேண்டும். இந்த கலவையை மயிர்க்கால்களில் மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக முடி மெலிந்து காணப்படும் பகுதிகளில் கவனம் செலுத்துங்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் ஷாம்பூ செய்வது ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியையும், நல்ல ரத்த ஓட்டத்தையும் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு இல்லாமல் கூட பூரி மசாலா செய்யலாமா!!!

பிளாக் டீ மற்றும் ஜோஜோபா எண்ணெய் 

பிளாக் டீ பேக்கை 2 டேபிள் ஸ்பூன் ஜோஜோபா எண்ணெயில் 5 முதல் 7 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பிறகு இந்த கலவையை வடிகட்டி டீ பேக்கை அப்புறப்படுத்தவும். இந்த வெதுவெதுப்பான எண்ணெயை மயிர்க்கால்கள் மற்றும் வேர்களில் மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தலை முடியை அலசுங்கள். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த சிகிச்சை ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை கொடுக்கும்.

விளக்கெண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் 

இந்த எண்ணெயை தயார் செய்வதற்கு 3 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையோடு ஒரு சில துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயை கலக்கவும். இந்த எண்ணெயை உங்களுடைய விரல்களை பயன்படுத்தி பொறுமையாக மயிர் கால்களில் மசாஜ் செய்யவும். ஒரு சில நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை அலசவும். இது தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, வீக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் பொடி 

இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயோடு ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய் அல்லது பொடியை கலக்கவும். இதனை வெதுவெதுப்பாக்கி தலைமுடி மற்றும் மயிர்கால்களில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இந்த போஷாக்கு நிறைந்த காம்பினேஷன் தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து பெயர்களை வலுவாக்கி பளபளப்பை சேர்க்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!