குளிர்காலத்தில் பனியுடன் சேர்ந்து நச்சுக்கள் கலந்த காற்று நம்மை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து விடுகின்றது. இதனை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிலும் குறிப்பாக நம்முடைய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவை சாப்பிடுவது அவசியம். அந்த உணவுகளில் ஒன்று வெல்லம். இது காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கு ஒரு சிறந்த பொருளாக கருதப்படுகிறது. வெல்லத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் B மற்றும் வைட்டமின் C போன்ற வைட்டமின்கள், செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் அதிகமாக காணப்படுகிறது.
குளிர்காலத்தில் வெல்லம் அதிக அளவில் சாப்பிடப்படுகிறது. ஏனெனில் இது ஒரு சூப்பர்ஃபுட் ஆக கருதப்பட்டு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெல்லம் எப்படி உதவும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நச்சு நீக்கம்
வெல்லத்தில் உள்ள ஆர்கானிக் காம்பவுண்டுகள் நுரையீரலை சுத்தம் செய்து, தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகள் மற்றும் நச்சுக்களை அகற்றுகிறது. அதன் கதகதப்பான தன்மை சளியை தளர்த்தி, அதனை வெளியேற்றுகிறது. இதனால் நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் வெல்லம் நுரையீரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை குறைத்து, அவற்றை சுத்தம் செய்வதற்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.
இதையும் படிக்கலாமே: உங்க பிரேக்ஃபாஸ்ட் மெனுல இந்த பழம் இருந்தா மினுமினுப்பான, இளமையான சருமம் பெறுவது உறுதி!!!
நோய் எதிர்ப்பு சக்தி
வெல்லத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் மினரல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுவாச தொற்றுகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்கிறது. மேலும் வெல்லத்தில் உள்ள பண்புகள் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை தூண்டி, நுண்ணுயிரிகளுக்கு எதிரான உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள்
வெல்லத்தில் செலினியம் ஜிங்க் மற்றும் இரும்பு சத்து போன்ற மினரல்கள் அடங்கிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஏராளமாக காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்சிடேட்டிவ் சேதம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. எனவே தினமும் வெல்லம் சாப்பிட்டு வர நம்முடைய ஆன்டி-ஆக்சிடென்ட் அளவு அதிகமாகி ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வெல்லத்தை சாப்பிடுவதற்கான வழிகள்
வெல்லத்தை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லத்தை சிறு சிறு துண்டுகளாக அப்படியே சாப்பிடுவது உங்களுக்கு உடனடி ஆற்றல் ஊக்கியாக அமையும். மேலும் அதனை பாலில் கலந்து சாப்பிடுவது இன்னும் சிறந்ததாக கருதப்படுகிறது. வெல்லம் வைத்து ஒரு சில இனிப்புகளை செய்தும் சாப்பிடலாம். இதன் மூலமாக உங்களுடைய நுரையீரல் ஆரோக்கியம் அதிகரித்து, காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கு தேவையான தெம்பு கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.