நம்ம வீட்டு குட்டீஸ்களை HMPV வைரஸிடம் இருந்து பாதுகாக்க நாம செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
10 January 2025, 7:11 pm

ஹியூமன் மெட்டா நீமோ வைரஸ் (HMPV) என்ற பொதுவான சுவாச வைரஸ் தொற்று அனைத்து வயதினரிடத்திலும் லேசான முதல் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு இது குறிப்பாக ஏற்படுகிறது. இது பொதுவாக சாதாரண சளியை ஏற்படுத்தலாம் மற்றும் நிமோனியா, ஆஸ்துமா அல்லது COPD போன்ற மோசமான தொற்றுகளுக்கும் வழிவகுக்கலாம். ஆகவே உங்களுடைய குழந்தைகளை HMPV வைரஸிடம் இருந்து பாதுகாப்பதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய சில எளிமையான நடவடிக்கைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கைகளை சுகாதாரமாக பராமரிப்பது HMPV வைரஸை தடுப்பதற்கான மிகவும் எளிமையான அதே நேரத்தில் பயனுள்ள வழிகளில் ஒன்று. கைகளை சோப்பு அல்லது ஹாண்ட் வாஷ் பயன்படுத்தி 20 வினாடிகளுக்கு கழுவி ஹேண்ட் சானிட்டைசர் பயன்படுத்தவும். தும்மல், இருமல் அல்லது பொம்மைகள் மற்றும் கதவின் தாழ்ப்பாள்களை தொட்டதற்கு பின்பு கைகளை கழுவ வேண்டும்.

குழந்தைகள் பெரும்பாலும் இருமல் அல்லது தும்மல் ஏற்படும்பொழுது தங்களுடைய வாய்களை மூடிக்கொள்ள மாட்டார்கள். எனவே இந்த மாதிரியான சமயத்தில் தங்களுடைய வாய் மற்றும் மூக்கை ஒரு கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்தி மூடுவது அவசியம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். மேலும் உடனடியாக அதன் பிறகு கைகளை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு சுற்றுப்புறத்தையும், குழந்தைகள் அவ்வப்போது பயன்படுத்தும் பொம்மைகள், தாழ்ப்பாள்கள், லைட் சுவிட்ச்சுகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவும். அதே நேரத்தில் டேப்லெட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்களை மறந்து விட வேண்டாம்.

சூழ்நிலை சீராகும் வரை உடல்நலம் குன்றியவர்கள் அல்லது தொற்றுக்கான அறிகுறிகளை காட்டுபவர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: உங்க சரும பிரச்சினைக்கு ஃபுல்ஸ்டாப் வைக்க இந்த ஒரு காய்கறி போதும்!!!

காற்று மூலமாக பரவும் தொற்றுகளை தடுப்பதற்கு நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்தவும். வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு அடிக்கடி ஜன்னல்களை திறந்து வைத்து தூய்மையான காற்று வீட்டிற்குள் வருவதை உறுதிப்படுத்தவும். அதே நேரத்தில் HEPA ஃபில்டர்கள் அடங்கிய ஏர் பியூரிஃபையர்களை பயன்படுத்துங்கள். புகை மற்றும் பிற மாசுபடுத்திகளுக்கு அருகில் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் HMPV தொற்றுக்கு எந்த ஒரு தடுப்பூசியும் இல்லாவிட்டாலும் வழக்கமாக உங்களுடைய குழந்தைகளுக்கு கொடுக்கும் தடுப்பூசிகளை சரியான தேதிகளில் போடவும்.

HMPV தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இருக்கும். மூக்கு ஒழுகுதல், இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வீசிங் போன்றவை இதற்கான சில பொதுவான அறிகுறிகள். உங்களுடைய குழந்தைக்கு அதிக காய்ச்சல் அல்லது மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!