பாரம்பரிய இந்திய சீஸ் வகையான பன்னீர் குழம்பு வகைகள், இனிப்பு மற்றும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் மார்க்கெட்டில் போலியான பன்னீர் விற்பனை செய்யப்படுவதையும், அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் கேடுகளும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் கெட்டுப்போன பன்னீர் விற்பனை செய்யப்படுவது பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே ஒருவேளை நீங்கள் கடைகளில் பன்னீர் வாங்கி பயன்படுத்துபவர் என்றால் போலியான பன்னீரை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு கண்டறிவது என்பதற்கான ஒரு சில சோதனைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அயோடின் சோதனை
பன்னீரை கொதிக்க வைத்து அதில் ஒரு சில துளிகள் அயோடின் சொல்யூஷனை சேர்க்கவும். பன்னீர் நீல நிறமாக மாறினால் நிச்சயமாக அது செயற்கையான பன்னீர். தரமான பன்னீர் அதன் அசல் நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
பருப்பு சோதனை
போலியான பன்னீரை கண்டறிய உதவும் மற்றொரு எளிமையான சோதனையில் கொதிக்க வைத்த பன்னீரை தண்ணீரில் குளிர வைத்து அதில் துவரம் பருப்பு சேர்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் லேசான சிவப்பு நிறமாக மாறினால் அது பன்னீர் கெட்டுப் போனதை குறிக்கிறது. நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத பட்சத்தில் அந்த பன்னீர் தூய்மையானதாக கருதப்படுகிறது.
அமைப்பு சோதனை
பொதுவாக பன்னீர் என்பது சாஃப்டாக இருக்க வேண்டுமே அன்றி ரப்பர் போல இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாக மிருதுவாக இருப்பதும் போலியான பன்னீரை குறிக்கிறது.
அரோமா சோதனை
இயற்கையான பன்னீரில் லேசான பால் வாசனை இருக்கும். இதுவே போலியான பன்னீரில் இந்த பால் வாசனை கட்டாயமாக இருக்காது. அது மட்டுமல்லாமல் அதில் ஒருவித கெமிக்கல் வாசனை வீசும்.
சுவை சோதனை
உண்மையான பன்னீர் சுத்தமான பால் சுவையை நமக்கு தரக்கூடும். ஆனால் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பன்னீரில் இந்த சுவையை நம்மால் காண முடியாது.
ஈரப்பத சோதனை
உண்மையான பன்னீரை அழுத்தும் பொழுது அதிலிருந்து வே வெளியிடப்படும். போலியான பிராடக்டுகளில் இந்த பண்புகள் இருக்காது.
போலியான பன்னீரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்
போலியான பன்னீர் அல்லது செயற்கையாக தயாரிக்கப்பட்ட பன்னீர் வயிறு பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை உடனடியாக ஏற்படுத்தும். தொடர்ந்து நீண்ட நாட்களாக நீங்கள் செயற்கை பன்னீரை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் அது உங்களுடைய கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். போலியான பன்னீரில் சேர்க்கப்பட்டுள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் மற்றும் பால் பவுடர் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு அபாயத்தை உண்டாக்கும். எனவே போலியான பன்னீர் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள சோதனைகளை செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.