கடைகளில் வாங்கும் டொமேட்டோ சாஸில் கலப்படம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது…???

Author: Hemalatha Ramkumar
9 November 2024, 4:23 pm

ஒரு சில வருடங்களாகவே உணவுகளில் கலப்படம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இது நுகர்வோருக்கு எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்குமான ஒரு பயத்தை உண்டாக்குகிறது. டீ தூளில் ஆரம்பித்து ஐஸ்கிரீம் வரை பல்வேறு உணவுகளில் கலப்படம் இருப்பது தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இந்த ப்ராடக்டுகளின் பட்டியலில் டொமேட்டோ சாஸ் நிச்சயமாக உண்டு. பல்வேறு விதமான உணவுகளில் பயன்படுத்தப்படும் டொமேட்டோ சாஸ் அதிகம் விற்பனையாகவும் ஒரு பொருளாக உள்ளது. இவற்றில் செயற்கை கலர்கள் அல்லது பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படலாம். இது நம்முடைய ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கும். எனவே டொமேட்டோ சாஸ் வாங்கும் பொழுது அது சுத்தமானதா மற்றும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? 

டொமேட்டோ சாஸின் தரத்தை வீட்டில் இருந்தபடியே சோதிப்பதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம். 

லேபிளை சரிபார்க்கவும்

முதலில் டொமேட்டோ சாஸ் பாட்டிலில் உள்ள லேபிளை கவனியுங்கள். அதில் உங்களுக்கு பரிச்சயம் இல்லாத மூலப்பொருட்கள் அல்லது அடிட்டிவ்கள் எதுவும் இருக்கக்கூடாது. சுத்தமான டொமேட்டோ சாஸில் வெறும் தக்காளி, உப்பு மற்றும் மசாலா பொருட்கள் போன்றவை மட்டுமே இருக்கும். ஒருவேளை அதில் செயற்கை நிறங்கள் அல்லது பிரிசர்வேட்டிவ்கள் இருந்தால் அதனை வாங்க வேண்டாம்.

தண்ணீர் சோதனை 

ஒரு ஸ்பூன் கெட்சப் எடுத்து அதனை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். ஒரு வேலை கெட்சப் உடனடியாக கரைந்து அந்த தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறினால் அதில் செயற்கை கலர் சேர்க்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும். மறுபுறம் அதிக தரமான டொமேட்டோ சாஸ் தண்ணீரின் நிறத்தை மாற்றாமல் அதன் மேற்பகுதியில் மிதக்கும். 

இதையும் படிக்கலாமே: கிரீன் டீயை விட அதிக சத்துக்கள் கொண்ட அவகாடோ பழ விதை!!!

அயோடின் சோதனை 

ஒரு சில துளிகள் அயோடினை டொமேட்டோ சாஸில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். ஒருவேளை சாஸ் நீல நிறமாக மாறினால் அதில் திக்கனிங் ஏஜென்டாக ஒரு சில கலப்பட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 

டொமேட்டோ சாஸ் நிற சோதனை 

தரமான டொமேட்டோ சாஸ் என்பது நல்ல ஒரு சிவப்பு நிறத்தை கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை அதில் இடை இடையே கருமை கலந்த சிவப்பு புள்ளிகள் இருந்தால் அதில் கலப்படம் இருப்பது உறுதி.

டொமட்டோ சாஸ் நிலைத்தன்மை சோதனை

ஒரு சிறிய அளவு டொமேட்டோ சாஸை ஒரு தட்டில் கொட்டி அதன் நிலைத்தன்மையை சரி பாருங்கள். சுத்தமான டொமேட்டோ சாஸ் தடிமனான அதே நேரத்தில் ஊற்றக்கூடிய அமைப்பை கொண்டிருக்கும். அதில் அதிகப்படியான தண்ணீர் இருக்காது. ஒருவேளை  வழக்கத்திற்கு மாறாக சாஸில் இருந்து தனியாக நீர் பிரிகிறது என்றால் அதில் குறைந்த தரம் கொண்ட பொருட்கள் அல்லது ஃபில்லர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 110

    0

    0