கண்மூடித்தனமாக சமையல் எண்ணெய்களை தேர்வு செய்வது உங்களுடைய இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் அதிகப்படியான சாச்சுரேட்டட் கொழுப்புகள் அல்லது டிரான்ஸ் ஃபேட் உள்ளன. இவை நம்முடைய உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து இதய நோய்களை ஏற்படுத்தலாம். உங்களுடைய இதயத்தை பாதுகாப்பதற்கு சரியான சமையல் எண்ணெயை தேர்வு செய்வது அவசியம். நீங்கள் தேர்வு செய்யும் சமையல் எண்ணெயில் மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் உங்கள் இதயத்திற்கு பலமளிக்கும் சமையல் எண்ணெய்களின் பட்டியலை இப்பொழுது பார்க்கலாம்.
சூரியகாந்தி எண்ணெய்
இதய நோயாளிகளுக்கு இது சிறந்த எண்ணெயாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் Eயை கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியம், நல்ல செரிமானம் மற்றும் சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது.
ஆலிவ் எண்ணெய்
இதயத்திற்கு ஆரோக்கியமாக கருதப்படும் இந்த எண்ணெய் பொரிக்க, வறுக்க மற்றும் பேக்கிங் போன்றவற்றிற்கு ஏற்ற எண்ணெயாக அமைகிறது. அதிக அளவு வெப்ப நிலையில் சமைக்கப்பட்டாலும் இதில் உள்ள ஃப்ளேவர் அல்லது ஊட்டச்சத்து மாறாது. இந்த எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடி ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவுகிறது.
இதையும் படிக்கலாமே: குளிர் காலத்திற்கு ஏற்ற மேக்கப் டிப்ஸ்!!!
கடலை எண்ணெய்
இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படும் இந்த எண்ணெய் எந்த ஒரு உணவையும் சமைப்பதற்கு ஏற்றதாக அமைகிறது. இதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் இதயத்தின் ஆரோக்கியத்தையும், கொலஸ்ட்ரால் அளவுகளையும் பராமரிக்கிறது.
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என்பது இதயத்திற்கு ஆரோக்கியமான ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து அதே நேரத்தில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. ஆன்டி- ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த எண்ணெய் ஃப்ரீ ரேடிக்கில்கள் காரணமாக ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குகிறது. மேலும் இந்த எண்ணெய் ஆன்டி-ஏஜிங் விளைவுகளைக் கொண்டுள்ளதால் நமக்கு இளமையான சருமத்தையும் அளிக்கிறது. இதில் எந்தவிதமான ட்ரான்ஸ் ஃபேட் கிடையாது மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பும் மிக குறைவான அளவில் உள்ளது.
சிறந்த சமையல் எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
சரியான சமையல் எண்ணெயை தேர்ந்தெடுப்பது என்பது நீங்கள் சமைக்கும் முறையை பொருத்தும், உங்களுடைய ஆரோக்கிய இலக்குகள் மற்றும் எண்ணெயின் ஊட்டச்சத்துக்களை பொருத்தும் அமையும். உதாரணமாக பொரித்தெடுக்க அல்லது கிரில் செய்ய அதிக புகை புள்ளி கொண்ட அவகாடோ எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்கள் அதிகப்படியான வெப்ப நிலைகளில் கூட உடையாமல் அப்படியே இருக்கும். இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய் கனோலா எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். எண்ணெயீகள் மூலமாக அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு சுத்திகரிக்கப்படாத மரசைக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்லாமல் டிரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் அதிகமாக உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.