ஒரே ஒரு பொருள் வைத்து கூட பியூட்டி பார்லருக்கு ஈடான ஹேர் மாஸ்க் வீட்டிலே ரெடி பண்ணலாம்!!!

Author: Hemalatha Ramkumar
10 June 2023, 3:52 pm

முடியை பராமரிக்கிறேன் என்ற பெயரில் பலர் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை தலைமுடியில் தடவுகின்றனர். இது தலைமுடிக்கு தற்காலிக அழகை கொடுத்தாலும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே வீட்டில் உள்ள பொருட்களை ஹேர் மாஸ்காக பயன்படுத்துவது சிறந்தது. ஆனால் ஒரு ஹேர் மாஸ்க் தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் பலரும் இதனை தவிர்த்து விடுகின்றனர்.

எனினும் ஒரே ஒரு பொருளை கொண்டு கூட நீங்கள் ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். ஒரே ஒரு பொருளை கொண்டு தலை முடியை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் ஹேர் மாஸ்கை எப்படி தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி, அவசியமான வைட்டமின் மற்றும் மினரல்களை அளிக்கிறது. இதனை வழக்கமாக செய்து வரும் பொழுது நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெயை ஹேர் மாஸ்காக பயன்படுத்த அதனை வெதுவெதுப்பாக சூடுப்படுத்தி தலையில் தடவவும். வேர் முதல் நுனிவரை நன்றாக தடவி 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். பின்னர் தலைமுடியை அலசுவது ஃப்ரிசை குறைத்து, தலைமுடியின் பளபளப்பை மேம்படுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் கற்றாழை மடல் ஒன்றை வெட்டி, அதில் உள்ள ஜல்லை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் தலைமுடியின் மயிர்க்கால்கள் மற்றும் முனைகளில் தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பின்னர் முடியை அலசுங்கள். இவ்வாறு செய்வது மென்மையான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலை தரும்.

வீட்டில் பழுத்த வாழைப்பழம் அதிகமாக இருக்கும் பொழுது அதனை ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம். பழத்த வாழைப்பழம் ஒன்றை நன்றாக மசித்து அதனை தலைமுடி முழுவதும் நன்றாக தடவும். வேர் பகுதியை மறந்து விடாதீர்கள். இதனை 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் லேசான ஷாம்புவை பயன்படுத்தி கழுவவும்.

பெரும்பாலும் நமது வீட்டில் முட்டை இல்லாமல் இருக்காது. முட்டையை கூட நீங்கள் ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம். உங்கள் முடியின் நீளத்தை பொறுத்து ஒன்று அல்லது இரண்டு முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி அதனை நன்றாக அடித்து பின்னர் தலைமுடியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து தலைமுடியை அலசி கொள்ளலாம். புரோட்டின் நிறைந்த இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடியின் சேதங்களை சரி செய்து, அதற்கு தேவையான போஷாக்கை அளிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!