குளிர்காலத்தில் பாடாய்படுத்தும் மூட்டு வலியிலிருந்து விடுபட நீங்கள் பின்பற்ற வேண்டிய அன்றாட பழக்கங்கள்!!!
Author: Hemalatha Ramkumar16 December 2024, 3:27 pm
வெப்பநிலை மாற்றம் மூட்டுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும். இது அன்றாட வேலைகளில் தலையிட்டு நம்முடைய சௌகரியத்தை போக்குகிறது. குளுமையான வானிலை வீக்கத்தை ஏற்படுத்தி, அசௌகரியத்தை மோசமாக்கும். மூட்டு வலி என்பது வளிமண்டலத்தில் உள்ள அழுத்தம் மற்றும் குளிர்காலத்தில் குறைவான உடல் செயல்பாட்டின் காரணமாக அதிகரிக்கிறது. ஆனால் இதற்காக இந்த சீசன் முழுவதிலும் மூட்டு வலியோடு இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
குளிர்காலம் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் விளைவை நிச்சயமாக உங்களால் குறைக்க முடியும். அதற்கு நீங்கள் ஒரு சில பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே போதுமானது. உங்களுடைய அன்றாட வழக்கத்தில் எளிமையான சில பழக்கங்களை சேர்ப்பது உங்கள் உடலை சௌகரியமாக வைத்து, இறுக்கத்தை போக்கும். அவ்வாறு உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்க்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைந்த தாக்கம் கொண்ட செயல்பாடுகள்
உடற்பயிற்சிகள் எப்பொழுதுமே மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை. வாக்கிங், யோகா, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மூட்டுகளில் நெகிழ்வுத் தன்மையை அதிகமாக்கி தசைகளை வலுவாக வைக்கும். இது தவிர நீங்கள் பைலேட்ஸ், எளிமையான நீட்சி பயிற்சிகள் போன்றவற்றையும் செய்யலாம்.
இதையும் படிச்சு பாருங்க: ஒரு நரைமுடியை புடிங்கி எடுத்தா நிறைய நரைமுடி வளரரும்னு சொல்றாங்களே… அது உண்மையா???
ஆரோக்கியமான உணவு
மூட்டுகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நீங்கள் உங்கள் அன்றாட உணவில் நட்ஸ் வகைகள், கீரைகள், பெர்ரி பழங்கள், இஞ்சி, மஞ்சள் மற்றும் பிற வீக்க எதிர்ப்பு உணவுகளை சேர்க்கலாம். இது வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு உதவும்.
நீட்சிகள்
தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு நீங்கள் ஒரு சில நீட்சி பயிற்சிகள் மற்றும் எளிமையான அசைவுகளை செய்யலாம். உங்களுடைய மூட்டுகளையும், திசைகளையும் இயக்கத்தில் வைப்பதற்கு அடிக்கடி கை, கால்களை நீட்டுவது, அதிலும் குறிப்பாக காலை படுக்கையில் இருந்து எழும்பொழுதும், தூங்குவதற்கு முன்பும் இதனை நீங்கள் செய்யுங்கள்.
சரியான ஆடைகள்
உங்களுடைய உடலை கதகதப்பாக வைப்பதற்கு சாக்ஸ் ,லெக்கின்ஸ் மற்றும் முழு கைகள் கொண்ட ஆடைகளை அணியுங்கள். இது உங்களுடைய மூட்டுகளின் ஆரோக்கியத்தை பராமரித்துக் கொள்ளும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.