நமது உடலில் கால்சியம் குறைவாக இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி???

Author: Hemalatha Ramkumar
28 September 2024, 1:28 pm

நமது உடலில் பல்வேறு முக்கியமான செயல்பாடுகள் நடைபெறுவதற்கு கால்சியம் என்பது ஒரு  அத்தியாவசியமான தாதுவாக அமைகிறது. இது எலும்பு அடர்த்தி, பற்களின் ஆரோக்கியம் மற்றும் சரியான தசை செயல்பாட்டை பராமரிப்பதற்கு அவசியம். கால்சியம் குறைபாடு இருப்பது நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக பெண்கள் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்  பெண்களின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சமாளிப்பதற்கு போதுமான அளவு கால்சியம் இருப்பது அவசியம். கால்சியம் குறைபாடு என்பது ஹைப்போ கால்சீமியா என்று அழைக்கப்படுகிறது. இப்போது நமது உடலில் கால்சியம் குறைபாடு இருக்கிறதா என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 

பெண்களில் கால்சியம் குறைபாட்டை அறிவுறுத்துகின்ற மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று எலும்பு ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகள். வலுவிழந்த எலும்புகள் மற்றும் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவது போன்றவை ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது குறிப்பாக பெண்களில் மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படுகிறது. இந்த நிலையானது குறைவான ஈஸ்ட்ரோஜன் அளவுகளால் ஏற்படுகிறது. இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு அடர்த்தியை பாதிக்கிறது.  

பல் சம்பந்தமான பிரச்சனைகள் 

கால்சியம் குறைபாடு என்பது பற்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். போதுமான அளவு கால்சியம் இல்லாவிட்டால் பற்கள் எளிதில் உடைவது, கேவிட்டி ஏற்படுவதற்கான அபாயம் மற்றும் மேலும் பற்கள் சம்பந்தமான பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் நல்ல வாய் சுகாதாரத்தை பராமரித்த போதிலும் உங்கள் உடலில் கால்சியம் இல்லாவிட்டால் அதனால் பற்சொத்தை மற்றும் பிற பல் சமந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். 

நகங்களின் ஆரோக்கியம் நகங்களின் ஆரோக்கியமும் உங்களுடலில் கால்சியம்  அளவுகளுக்கான ஒரு தெளிவான அடையாளமாக திகழ்கிறது. கால்சியம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தங்களுடைய நகங்கள் எளிதில் உடைந்து போவது, வெளிர் நிறத்தில் இருப்பது அல்லது எளிதாக சேதத்திற்கு ஆளாவது போன்றவற்றை கவனிக்கலாம். உங்களுடைய நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறது என்றால் நிச்சயமாக உங்களுடைய உடம்புக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். 

ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மோசமான PMS 

ஹார்மோன் சீரமைப்பில் கால்சியம் முக்கிய பங்கு கொண்டுள்ளது. குறைவான கால்சியம் அளவுகள் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை மோசமாக்கலாம். அதனால் உங்களுக்கு மோசமான மனநிலை மாற்றங்கள், வயிற்று வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். எனவே மாதவிடாய் சமயத்தில் குறிப்பாக கால்சியம் சத்து எடுத்துக் கொள்வது இதுபோன்ற அறிகுறிகளை சமாளிக்கவும், ஹார்மோன் சமநிலையை பேணவும் உதவும். 

தொடர்ச்சியான சோர்வு மற்றும் சோம்பேறித்தனம் 

கால்சியம் என்பது உங்களுடைய ஆற்றல் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. எப்பொழுதும் சோர்வாக இருப்பது மற்றும் சோம்பேறித்தனமாக உணர்வது கால்சியம் குறைபாட்டின் ஒரு அறிகுறி. உங்களுடைய உடலில் போதுமான அளவு கல்சியம் சத்து இல்லாவிட்டால் உங்களுக்கு தசை வலி, அடிக்கடி சுளுக்கு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். 

கால்சியம் குறைபாட்டை சமாளிப்பதற்கு நீங்கள் பால் அடிப்படையில் தயாரிக்கப்படும் பொருட்களான சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றை சாப்பிடலாம்.

இது தவிர  கீரை வகைகள், ப்ராக்கோலி, பாதாம் பருப்பு போன்ற உணவுகளை சாப்பிடலாம்.  உணவு மூலமாக உங்களுக்கு போதுமான அளவு கால்சியம் கிடைக்காவிட்டால் நீங்கள் கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை அதிக அளவில் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் போன்ற மோசமான பக்க விளைவுகைக ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை எடுக்காதீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 199

    0

    0