சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர வெண்டைக்காயை எப்படி சாப்பிட வேண்டும்???

Author: Hemalatha Ramkumar
1 December 2022, 4:39 pm

வெண்டைக்காய் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக போடலாம் என்று உங்கள் அம்மா அடிக்கடி உங்களிடம் சொல்லியது நினைவுக்கு வரலாம். இருப்பினும் ஒரு சிலருக்கு வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை காரணமாக அதனை ஒதுக்கி விடுவார்கள்.

ஆனால் விஷயமே அந்த வழவழப்புத் தன்மையில் தான் உள்ளது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையானது ஏகப்பட்ட மருத்துவ குணங்களை தன்வசம் வைத்துள்ளது. முக்கியமாக வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். அந்த வகையில் வெண்டைக்காயை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

அது மட்டும் இல்லாமல் அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகள் உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரை தொடர்ந்து உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு வெண்டைக்காய் மிகவும் அவசியம். ஏனெனில் கர்ப்ப காலத்திற்கு அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டையில் அதிகம் காணப்படுகிறது. இறுதியாக வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்படும் இதய பிரச்சினைகளும் வராமல் தடுக்கலாம்.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 353

    0

    0