இத டெய்லி குடிச்சா தொப்ப வெண்ணெய் மாதிரி கரைஞ்சுடும்!!!

Author: Hemalatha Ramkumar
7 June 2023, 4:24 pm

இன்றைய நவீன உலகில், பெரும்பாலான மக்கள் உடல் பருமன் அல்லது தொப்பை காரணமாக அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம், வரைமுறை இல்லாத, சீரற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நமது உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கெட்ட நீர் ஆகும். உடல் பருமன் காரணமாக அதிக ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்த உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி செய்ய பலருக்கும் நேரம் இல்லாத சூழலில், நாம் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை கொண்டு எளிமையான வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இப்போது காண்போம்.

சோம்பு ஒரு ஸ்பூன் மற்றும் சீரகம் அரை ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். காலை எழுந்தவுடன் இந்த நீரை வடிகட்டி தேன் கலந்து, வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. நார் சத்துக்கள் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. சோம்பில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக சோம்பு எடையை குறைக்க உதவும் என்று கண்டிப்பாக நம்பலாம்.

ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் பருமன் ஏற்பட வழிவகை செய்கின்றன. பெருஞ்சிருக்கத்தில் துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

சோம்பு இயற்கையாகவே டையூரிடிக் தன்மை கொண்டது. எனவே சோம்பு டீ அல்லது தண்ணீரை குடிப்பது உங்கள் உடலில் இருந்து கூடுதல் நீரை அகற்றுகிறது. இதன் மூலம் உடலில் தேவையில்லாமல் நீர் சேருவதை தடுக்க முடியும்.

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 440

    0

    0