மழைக்கால நோய்களை தூர விரட்டும் ஓம விதைத் தேநீர்!!!

Author: Hemalatha Ramkumar
25 July 2022, 5:59 pm

வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். இது ஒரு வலுவான சுவர் போன்றது. இது நம் உடலை நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாத்து, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு நோய், தொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் குறைந்த நேரத்தில் காயத்திற்குப் பிறகு மீட்க உதவுகிறது.

இது ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். அதனால்தான் வல்லுநர்கள் எப்போதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.
கொரோனா வைரஸ் வடிவத்தில் உலகம் ஒரு கொடிய தொற்றுநோயைக் கையாளும் இந்த நேரத்தில் மற்றும் காய்ச்சல் பருவம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வலுவான உள் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருப்பது இன்னும் முக்கியமானது.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான விஷயம் என்னவென்றால், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும். உடனடியாக நடந்து விடாது. இது நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அடையப்படுகிறது. சுத்தமாக சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் தூங்குவது போன்றவை உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் சில விஷயங்கள். இருப்பினும், உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் ஊக்கமளிக்க விரும்பினால், இந்த ஓமம் தேநீரை முயற்சிக்கவும்.

ஓமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி:
ஓமம் விதைகள் பெரும்பாலான இந்திய சமையறைகளில் காணப்படும் பொதுவான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். ஓமம் விதைகள் கசப்பான சுவை மற்றும் வலுவான நறுமணத்தைக் கொண்டுள்ளன. இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவை சேர்க்கிறது. இது பெரும்பாலும் ஊறுகாய் மற்றும் சட்னிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிறிய விதைகளுக்கு சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவர். இது செரிமான மற்றும் மலமிளக்கிய பிரச்சனைகளுக்கு உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் நன்மை பயக்கும் மற்றும் சளி மற்றும் இருமல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாக அறியப்படுகிறது. ஓம விதைகளில் உள்ள என்சைம்கள் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தும் இரைப்பை சாறுகளை வெளியிடுவதை ஊக்குவிக்கிறது.

ஓமம் தேநீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:

1/2 தேக்கரண்டி ஓமம் விதைகள்

5 துளசி இலைகள்

கருப்பு மிளகு தூள் 1/2 தேக்கரண்டி

1 தேக்கரண்டி தேன்

முறை: ஒரு அடிகனமான கடாயை எடுத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர், ஓமம் விதைகள், கருப்பு மிளகு மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும். தண்ணீரை 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து, கஷாயத்தை வடிகட்டவும். அதில் தேன் சேர்ப்பதற்கு முன் கலவையை சிறிது நேரம் ஆறவிடவும். நன்றாக கலந்து குடிக்கவும்.

யாரெல்லாம் இந்த தேநீரை தவிர்க்க வேண்டும்?
ஓம விதைகளை அளவாக உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும். ஒரே நாளில் அதிக அளவு ஓமம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த தேநீரை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுங்கள்.

*நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ இதனைத் தவிர்க்கவும்.

*எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தத் தேநீர் குடிப்பதை நிறுத்துங்கள்.

*ஓமம் இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்டது. எனவே, நீங்கள் இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொண்டாலோ அல்லது இரத்தம் தொடர்பான ஏதேனும் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, இந்த கலவையை குடிக்க வேண்டாம்.

*கல்லீரல் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!