காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் உள்ளி காரம் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
19 November 2024, 7:24 pm

பெரும்பாலானவர்களின் வீடுகளில் கோவக்காய் சமைக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் கோவக்காயை அதிகமான நபர்கள் சாப்பிடாதது தான். ஆனால் ஆந்திரா ஸ்டைலில் கோவக்காய் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு அதனை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக அனைவரும் ஆசையோடு சாப்பிடுவார்கள். இதனை தொட்டுக்கையாகவும் பயன்படுத்தலாம் அல்லது வெள்ளை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். இப்போது ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் உள்ளீகாரம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம். 

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் தனியா விதைகள் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் 6 முதல் 7 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளலாம். அடுத்து இரண்டு மீடியம் அளவு பெரிய வெங்காயத்தை பொடியாக சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் வதங்கியவுடன் 5 பல் பூண்டை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனோடு அரை டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை கரைத்து அந்த புளித்தண்ணீரை 1/2 கப் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: தாய்ப்பால் கொடுக்கும் போது மறக்காம இந்த ஹைஜீன் டிப்ஸ் ஃபாலோ பண்ணிடுங்க!!!

இப்போது அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து 1/2 கிலோ அளவு கோவக்காயை உங்களுக்கு பிடித்தமான அளவுகளில் நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனை மூடி போட்டு காய் வேகும் வரை காத்திருக்கவும். 

கோவக்காய் நன்றாக வெந்தவுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறுங்கள். நிறத்திற்காக 1/2 டீஸ்பூன் அளவு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். இப்போது மீண்டும் மூடி போட்டு 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் நாம் தயார் செய்து வந்த கோவக்காய் உள்ளிக்காரம் இப்போது தயாராக உள்ளது.

  • Famous Actor Played Villain Role against Sivakarthikeyan சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ… அடுத்தடுத்து தோல்வியால் திடீர் முடிவு!
  • Views: - 34

    0

    0